சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு? சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.

சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு?

கூட்­ட­மைப்பபை பதிவு செய்ய வேண்டும்

இந்­தி­யா­வுடன் நல்­லு­றவு உள்­ளது

முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர்

சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் மீண்டும் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது என்று குறிப்­பிட்­டவர் வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

ஏதிர்­வரும் மாதம் 25ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து முத­ல­மைச்சர் சி.வி;.விக்­கி­னேஸ்­வரன் வீர­கே­சரி வார இத­ழுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக கருத்துப் பரி­மாற்­றத்தின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அதன் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி – ஒக்­டோபர் 23ஆம் திகதி உங்­களின் பிறந்த தினத்­தன்று வட­மா­காண சபையின் முதலாம் அத்­தி­யாயம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகி­றீர்கள்?

பதில் – 24ஆம் திகதி பௌர்­ணமி தின­மா­கை­யாலும் 25ஆம்; திக­தியே கடைசித் தின­மாகக் கூறப்­பட்­டுள்­ள­தாலும் வட மாகா­ண­சபை ஒக்­டோபர் 23ஆம் திகதி கூட இருக்­கின்­றது. அன்­றைய தினம் பிறந்த தின­மாக அமைந்­தது எதேச்­சை­யாக ஏற்­பட்ட ஓர் ஒற்­றுமை.

நான் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனஞ் செலுத்த உள்ளேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து, எமது மக்­களின் தேவை­களை, அபி­லா­ஷை­களை, விருப்பு வெறுப்­புக்­களை, கரி­ச­னை­களைத் தெரிந்து வைத்து உல­கிற்கு எடுத்துக் கூறவும் அர­சாங்­கத்­திற்கு எடுத்துக் கூறவும் வேண்­டி­யுள்­ளது. என்னால் முடிந்­ததை இது சம்­பந்­த­மாகச் செய்ய முன்­வ­ருவேன்.

கேள்வி – அடுத்த கட்டம் தொடர்பில் 4 தெரி­வு­களைக் கொண்­டி­ருக்கும் நீங்கள் இறுதி முடிவை எப்­போது எடுக்­க­வுள்­ளீர்கள்?

பதில் – வட­மா­கா­ண­சபைத் தேர்­தல்கள் உடனே நடை­பெ­றக்­கூ­டிய சாத்­தியக் கூறுகள் மிகவும் குறைவு. முதலில் நான்­கா­வது தெரிவில் ஈடு­பட்டுக் கொண்டு மேற்­கொண்டு நடக்க வேண்­டி­யவை பற்றி பின்னர் ஆராய்வோம்.

கேள்வி – உங்­களை முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்ய வேண்டும் என்­பதில் ஆரம்பம் முதல் இறு­தி­வரை இறுக்­க­மாக இருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை சந்­திப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உண்டா?

பதில் – நான் எப்­பொ­ழுதும் ஆயத்தம். அவ­ருடன் எனக்­கென்ன பிணக்கு? அவரின் வலது கரம் இட­ம­ளித்தால் அவரும் என்னைச் சந்­திப்­பதில் அவ­ருக்கு எந்தத் தடங்­கலும் இருக்­காது என்று நம்­பு­கின்றேன்;.

கேள்வி – உங்­க­ளி­டத்தில் காணப்­படும் 4 தெரி­வு­களில் நான்­கா­வது தெரிவை மேற்­கொள்ளும் பட்­சத்தில் கூட்­ட­மைப்பு வர­வேற்­புடன் ஆத­ரவை நல்கும் என அதன் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கின்­றதைக் கருத்தில் எடுப்­பீர்­களா?

பதில் – கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே ஆத­ரவு நல்­கியே வரு­கின்­றது. பேச்­சா­ள­ருக்கு இது தெரி­யாது போலும்!

கேள்வி – கொள்கை ரீதி­யாக புதிய கூட்­ட­ணியை உரு­வாக்கி அடுத்த தேர்­தலில் கள­மி­றங்­கு­வீர்­களா?

பதில் – இன்­னமும் முடி­வெ­டுக்­க­வில்லை. ஆனால் கொள்கை ரீதி­யா­கவே எனது நிலை இருக்கும் என்­பதில் சந்­தேகம் இருக்கத் தேவை­யில்லை.

கேள்வி – எதிர்­கா­லத்தில் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று அதன் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தி­யப்­பாடு உள்­ளதா?

பதில் – தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் சாத்­தி­யப்­பாடு உண்டு.

கேள்வி – வட­மா­காண சபையின் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டில் பின்­ன­டை­வுகள் உள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

பதில் – இன்­றைய மத்­திய அர­சாங்கம் பற்­றியும் அவர்­களின் வினைத்­திறன் சம்­பந்­த­மா­கவும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. ஆகவே யாரும் இவ்­வா­றான கேள்­வி­களை யாரைப்­பற்­றியும் அடுக்­கலாம். எம்மைப் பொறுத்த வரையில் பின்­ன­டை­வு­க­ளுக்குக் காரணம் நாமல்ல. எம்முள் இருந்து கொண்டே எமக்குக் குழி­ப­றித்துக் கொண்­டி­ருப்­போரே அதற்குப் பதில் கூற வேண்டும். அர­சியல் ரொட்டித் துண்­டு­களைக் காட்டி அற நிலை மறந்த அவை­யினர் சிலரை வைத்து அரங்­கேற்­றிய நாட­கங்கள் பின்­ன­டைவைத் தராமல் எதனைத் தரு­வன? அப்­படி இருந்தும் எமது செயற்­பா­டுகள் பற்றி நல்­லதே கூறப்­பட்­டுள்­ளன. நாடு பூரா­கவும் உள்ள 800க்கும் அதி­க­மான அரச அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் போன்­ற­வற்றுள் 2015ஆம் ஆண்டில் எமது மாகாண முத­ல­மைச்சர் அமைச்சே சில விட­யங்கள் சம்­பந்­த­மாக முத­லிடம் பெற்­றது. 2016இலும் நாம் முதன்மை நிலை­யில்த்தான் அடை­யாளம் காட்­டப்­பட்­டுள்ளோம். சதிகள் பல நடந்­தாலும் எமது செயற்­பா­டுகள் வினைத்­தி­ற­னு­டன்தான் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. முட்­டை­களை இட்­டு­விட்டு கொக்­க­ரித்து எமது வினைத்­திறன் பற்றி பறை­சாற்ற வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை.

கேள்வி – இது­வரை காலத்தில் வட மாகாண சபை சாதித்­தது என்ன?

பதில் – எமது சாத­னைகள் பற்­றிய கைநூல் விரைவில் வெளி­வரும். அதை வாசித்துத் தெரிந்து கொள்­ளலாம்.

கேள்வி – கஜேந்­தி­ர­குமார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் இரு துரு­வ­மா­கி­யுள்ள நிலையில் புதிய கூட்­டணி ஒன்று அமை­வ­திலும் சிக்­கல்கள் இருப்­பது போல் உள்­ளதே?

பதில் – கொள்­கைகள் ஒன்றாக இருந்தால், மக்களின் நலனே முக்கியமென்ற எண்ணம் வேரூன்றி விட்டால் துருவங்கள் கூட இணையலாம்.

கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையின் அரசியல் தலைமைகள் இந்தியாவின் கரிசனையை கவனத்தில் கொண்டு செயற்படுகின்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் அரசியல் களத்தில் பயணிப்பதை உறுதிசெய்துள்ள நீங்கள் இந்தியாவுடன் உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்துவீர்களா?

பதில் – இந்தியாவுடனான எனது உறவுகள் என்றுமே நன்றாகவே இருந்து வருகிறது. அதில் கட்டி எழுப்ப எதுவும் இல்லை.

.