செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் ஈழ தமிழ்ப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவர்?

வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஈழ பின்னணி கொண்ட தமிழ்ப்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததாக நம்பப்படுகிறது. கடந்த திங்களன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் என்று கூறப்படும் குறிப்பிட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற பின்னர் கணவரே பொலிஸாரை அழைத்தார் என்று குயின்ஸ்லாந்து காவல் துறையினர் கூறியுள்ளார்கள். தேவகி என்ற 52 ...

Read More »

பலமான கடவுச்சீட்டு பட்டியல்! முன்னேறியது அவுஸ்திரேலியா!

உலக அளவில் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்படுத்தல் வெளியாகியுள்ளது. இந்த தரப்படுத்தலில் அவுஸ்திரேலியா முன்னேரியுள்ளது. Henley எனும் கடவுச்சீட்டு தரப்படுத்தல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கை மூலம் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஆய்வுக்கு அமைய ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. குறித்த நாடுகள் இரண்டின் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பிரஜை ஒருவர் விசா இன்றி 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்த பட்டியலுக்கமைய தென் கொரியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கடவுச்சீட்டை வைத்திருப்போர் 187 நாடுகளுக்கு விசா ...

Read More »

உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்கள் முடங்கின!

உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் இன்று பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு இன்று நடைபெற்றது. இன்று மாலை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ...

Read More »

சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய வேனை விடுவித்த நீதிமன்றம்!

சஹ்ரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு  காவல் துறையால்  மீட்கப்பட்ட  டொல்பின் ரக வேன் இன்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவானால் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது. சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் குழுவினர் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்திய வேன் மூலம் மீரி­கம பகுதிக்குச் சென்று ஆடை விற்­பனை நிலை­ய­ம் ஒன்றில் சிங்­களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களைக் கொள்­வ­னவு செய்­தி­ருந்­தனர். இந்நிலையில்  வாடகை மூலம் பெறப்பட்ட குறித்த  வேன் அண்மையில் காவல் துறையால்  கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் குறித்த ...

Read More »

ஹிஸ்புல்லா குற்றத்தடுப்பு பிரிவில் வாக்குமூலம்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார் என்று முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாக  ஏற்கனவே முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, இன்று காலை 10 மணியளவில் அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவில் முன்னிலையாகியிருந்ததார் .

Read More »

மைத்­தி­ரியின் பிடிவாதம்..!

சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் எதிர்ப்­புகள் வலு­வ­டைந்­துள்ள போதிலும் தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­றியே ஆக வேண் டும் என்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்தில் தளர்ச்­சியைக் காண முடி­ய­வில்லை. மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­களை தூக்கில் இட்டு தண்­டிக்­கின்ற நடை­முறை நான்கு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. மரண தண்­ட­னைக்குப் பதி­லாக அந்தக் கைதிகள் ஆயுட்­கால சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வந்­துள்­ளார்கள். ஜனா­தி­ப­தியின் தூக்குத் தண்­டனை நிறை­வேற்றத் தீர்­மானம் இந்த நடை­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வழிவகுத்­துள்­ளது. எதிர்ப்­புகள் இருந்த போதிலும், மரண தண்­டனைக் கைதி­களை – குறிப்­பாக போதைப் ...

Read More »

சிட்னி நகரின் முக்கிய இடங்களை தகர்க்க திட்டமிட்ட ஐஎஸ்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் மேற்குபகுதியில் இன்று பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் ...

Read More »

கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமரும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என இம்ரான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர்கள் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் ...

Read More »

அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை !

கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­தக்­கோரி நடத்­தப்­பட்ட  உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் கடந்­த­ வாரம் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி வண.ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் கிழக்­கி­லங்கை இந்­து ­கு­ருமார் ஒன்­றியத் தலை­வரும் கல்­முனை முருகன் ஆலய பிர­தம குரு­வு­மான சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்த சிவக்­கு­ருக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அழ­கக்கோன் விஜ­ய­ரெத்­தினம் அனைத்து இந்து ஆல­யங்­களின் ஒன்­றி­யத்­த­லை­வரும் தொழி­ல­தி­ப­ரு­மான  கிருஸ்­ண­பிள்ளை லிங்­கேஸ்­வரன் ஆகியோர் இதில் ...

Read More »

கடமைகளை பொறுப்பேற்ற ஆஸ்திரியாவுக்கான சிறிலங்கா தூதுவர்!

ஆஸ்திரியாவுக்கான  சிறிலங்கா  தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆஸ்திரியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக ஆஸ்திரிய – சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு ஆஸ்திரியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மீண்டும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் ...

Read More »