உலக அளவில் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.
இந்த தரப்படுத்தலில் அவுஸ்திரேலியா முன்னேரியுள்ளது. Henley எனும் கடவுச்சீட்டு தரப்படுத்தல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கை மூலம் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஆய்வுக்கு அமைய ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. குறித்த நாடுகள் இரண்டின் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பிரஜை ஒருவர் விசா இன்றி 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இந்த பட்டியலுக்கமைய தென் கொரியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கடவுச்சீட்டை வைத்திருப்போர் 187 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.
மூன்றாம் இடத்தை டென்மார்க் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், இத்தாலி, Luxembourg மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.
சுவீடன் மற்றும் ஸ்பெயின் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஒஸ்ரியா, நெதர்லாந்து மற்றும் சுவிட்ஸ்ர்லாந்து ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
பிரித்தானியா கடவுச்சீட்டு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 14 வருடங்களின் பின்னரே பிரித்தானியா கடவுச்சீட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளது.
பிரித்தானியா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 183 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது. புதிய தரப்படுத்தலுககு அமைய பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆறாம் இடத்தை பிடித்துள்ளன.
அத்துடன் இந்த பட்டியலில் அவுஸ்திரேலியா 9வது இடத்தை பிடித்துள்ளது. அவுஸ்திரேலியா கடவுசீட்டை பயன்படுத்தி மொத்தமாக 180 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.
இதேவேளை, வெளியாகிய தரப்படுத்தலுக்கமைய இலங்கை 99ஆம் இடத்தை பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போர், விசா இன்றி 44 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.