ஊர்ப் பெயரும் தாயார் பெயரும் ஒன்றாகக் கொண்டவர் இளங்குமரனார் (1930 – 2021). தாயார் பெயர் வாழவந்தாள். ஊர்ப் பெயர் வாழவந்தாள்புரம். தந்தை பெயர் இராமு; ஊர் வைத்த பெயர் ‘படிக்கராமு’. பெற்றோரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததால், அந்த நாள் வழக்கப்படி அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘கிருஷ்ணன்’. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் நூல்கள் தந்த தனித்தமிழ் உணர்வால் இவர் மாற்றிக்கொண்ட பெயர், ‘இளங்குமரன்’. இடைவிடாமல் படிக்கும் தந்தையாரின் பழக்கம் இவரிடமும் ஒட்டிக்கொண்டது. திருக்குறள் முழுவதையும் 12 வயதுக்குள்ளும், தொல்காப்பியம் முழுவதையும் 16 வயதுக்குள்ளும் மனப்பாடம் ...
Read More »செய்திமுரசு
விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் நைக் முத்திரை காலணிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE (நைக்) முத்திரை காலணிகள், தம்மால் தயாரிக்கப்படவில்லை என NIKE நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளமை தொடர்பில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து NIKE Inc. நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, அந்த நிறுவனம், குறித்த உற்பத்தி, தம்மால் தயாரிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளதாகசிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமது புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, ...
Read More »ரூ. 2.5 கோடிக்கு விற்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்
ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது. ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விண்ணப்ப படிவத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது ...
Read More »ஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கனில் ஐ.நா. சபை வளாகம் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா. ...
Read More »ஆஸ்திரேலியாவில் கல்வி கற்ற இந்திய இளைஞர் நியூசிலாந்தில் திடீர் மரணம்!
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றுவிட்டு நியூசிலாந்தில் வசிந்துவந்த இந்திய நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த சித்தார்த் என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவர் ஆவார். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து பிரிஸ்பேனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சித்தார்த், நேபாளத்தை சேர்ந்த சிறிஜனாவை சந்தித்து, இருவருக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. அதன்பின்னர், நியூசிலாந்துக்கு சென்று அங்கு வசித்த சித்தார்த் – சிறிஜனாவுக்கு ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தையும் இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்துறையில் தனது கல்வியை ஆஸ்திரேலியாவில் நிறைவுசெய்துகொண்டு நியூசிலாந்து சென்ற சித்தார்த், அங்கு ஹோட்டல் ஒன்றில் பதிவுகளை ...
Read More »தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரோ விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நடேசன் தருமராசா, தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், பயங்கரவாத ...
Read More »கொவிட் தடுப்பூசி, டெல்டா வைரஸ் தொற்றுக் குறித்து முல்லை மக்கள் அச்சப்படத் தேவையில்லை
கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு தவறான புரிதல்கள் இருக்கின்றன. அந்த தவறான புரிதல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த அரிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை அனைத்து மக்களும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி வி.வஜிதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை டெல்டா வைரஸ் தொற்றுக்களோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை எவரும் இனங்காணப்படவில்லை எனவும், முல்லைத்தீவைச்சேர்ந்த ஒருவர் ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் அவருக்கு டெல்டா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளதாகவும் வைத்தியர் வி.வஜிதரன் ...
Read More »ஹிஷாலினியின் மரணம்! லையகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அவசியம்
சிறுமி ஹிஷாலினியின் மரணம், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு குற்றவியல் சம்பவமாகப் பதிவாகி இருக்கின்றது. ஆனால் அந்த மரணம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வினாக்களும், ஏற்கனவே பலதரப்பினராலும் எழுப்பப் பட்டுள்ள வினாக்களும் மலையகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிமாணங்களை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அந்தச் சிறுமியின் மரணம் இன மத சமூக நிலைமைகளைக் கடந்து நாடளாவிய ரீதியில் பலதரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு, சிறுவர் உரிமைச் செயற் பாட்டாளர்கள் ...
Read More »மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா 4-ம் அலை தாக்கும்
ஈரான், ஈராக், துனிசியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. இதில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்ற பெயரிடப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே டெல்டா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து ...
Read More »ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இடையில் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள்
ஆஸ்திரேலியாவில் மனநலச் சிகிச்சைக்கான தற்போதைய முறை புதிய நோயாளிகளுக்கான தேவையை கையாள முடியாத வகையில் உள்ளதாக மருத்துவர்களும் உளவியலாளர்களும் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளுதல், அதிகமாக உண்ணுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆஸ்திரேலியர்கள் மருத்துவ ஆலோசனை கேட்பது அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மனநல நோயாளிகள் அதிகரிக்கும் நிலையில் குறைவான திறன் வாய்ந்த மனநல ஆலோசகர்களே இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய நிலை ஆஸ்திரேலிய சுகாதார அமைப்பை பாதிக்கக்கூடும் என்றும் இதனால் வருங்கால தலைமுறையினரும் பாதிக்கப்படுவார்கள், பொருளாதாரமும் பாதிக்கப்படும் ...
Read More »