கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின் போக்கை அடியோடு திசை திருப்பியிருந்தன. அன்றைய ஆளும்கட்சியான ஐ.தே.கவுக்கு மரண அடி கொடுத்த அந்தத் தாக்குதல்கள், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அதுவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கும், முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ ...
Read More »செய்திமுரசு
பற்றிப் பரவும் கரோனா
சீனா: பாதிப்புகள் – 80,793 மரணங்கள் – 3,169 இத்தாலி: பாதிப்புகள் – 12,000 மரணங்கள் – 827 ஈரான்: பாதிப்புகள் – 9,000 மரணங்கள் – 354 தென் கொரியா: பாதிப்புகள் – 7,869 மரணங்கள் – 66 ஸ்பெயின்: பாதிப்புகள் – 2182 மரணங்கள் – 49 பிரான்ஸ்: பாதிப்புகள் – 1,784 மரணங்கள் – 33 ஜெர்மனி: பாதிப்புகள் – 1908 மரணங்கள் – 3 ஜப்பான்: பாதிப்புகள் – 1278 மரணங்கள் – 19 அமெரிக்கா: பாதிப்புகள் – ...
Read More »கரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 1,500 பேருக்குப் பரவியது!
ஸ்பெயினில் ஒரேநாளில் 1500 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் உருவான கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக இதுவரை உலகெங்கிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கிடையே ஒரே இரவில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஸ்பெயினில் இதுவரை 136 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் ...
Read More »கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?
கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று விரிவாக பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 லட்சம் பேர் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். தடுப்பு மருந்து இல்லாத கொரோனா வைரஸ் என்ன காரணத்தினால் பரவுகிறது? இதை தடுக்க முடியுமா? கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு பெற வேண்டும். கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் ...
Read More »எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்!
தமிழகத்தில் பணப்பலம், அரசியல் பலத்துக்கு எதிராக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவதாகவும் முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருந்தேன்- ரஜினிகாந்த் 54 ஆண்டு ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டிய கால கட்டம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. மக்கள், இளைஞர்களிடம் எழுச்சி உண்டாக வேண்டும். வருங்கால முதல்வர் என்று சொல்வதை ரசிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்- ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்கடந்த 2 ஆண்டுகளாக ...
Read More »அச்சத்துக்கும் அறிவியலுக்கும் நடுவே…
அதுவோர் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு… அன்றைய விரிவுரையை நடத்துவதற்கு, அறைக்குள் வந்த பேராசிரியர், தான் கற்பிக்கப் போகும் விடயப் பரப்பின் தலைப்பையும் தனது பெயரையும் திரையில் விழுத்துகிறார். வகுப்பெங்கும் சலசலப்பும் அங்காங்கே முணுமுணுப்புகளும்…. பேராசிரியர் இப்படித் தொடங்குகிறார்; “வணக்கம்! நான் இத்தாலியன் என்பதை நீங்கள் அனுமானித்திருப்பீர்கள். வடக்கு இத்தாலியில் உள்ள எவருடனும் நான், நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை. இத்தாலியில் இருந்து வந்த எவரையும் நான், கடந்த இரண்டு மாதங்களாகச் சந்திக்கவில்லை. இவை, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் என்று நம்புகிறேன்”. வகுப்பில் ஒரு நீண்ட பெருமூச்சு; ...
Read More »சிறிலங்கா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு சவுதி தடை!
சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளுக்கு சிறிலங்கா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இதுவரை 45 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சவுதி அரேபியாவின் தற்காலிக பயண தடை பட்டியலில் உள்ள நாடுகள் மெனா பிராந்தியம் 1. பஹ்ரைன் 2. எகிப்து 3. ஈராக் 4. குவைத் 5. லெபனான் 6. ஓமான் சிரியா 7. துருக்கி 8. ஐக்கிய அரபு அமீரகம் ...
Read More »கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ….!
கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித நோக்கமும் இல்லை என தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் கேள்வி ...
Read More »அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமான விபத்து : 5 பேர் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவில் சீரற்ற வானிலை காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செயதிகள் தெரிவிக்கின்றன. வட அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லான்ந்து பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் பறந்துக்கொண்டிருந்து விமானம் சீரற்ற காலநிலயை தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்தே , அந்நாட்டின் பூர்வீக சமூக குடியேற்றமான லாக்ஹார்ட் கடற்கரை அருகே விமானத்தின் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே விமானம் அப்பகுதியில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »தேர்தலில் உள்நாட்டு, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்கள்!
நாடாளுமன்றத் தேர்தலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்களை, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக, பெப்ரல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் 40 பேர் இலங்கை வர உள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு கையளிக்கும் நாள் தொடக்கம் கண்காணிப்புச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்களும் இத்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். வேட்புமனுக்கள் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி ...
Read More »