கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித நோக்கமும் இல்லை என தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்
அத்தோடு, தேர்தல் நடத்துவது தொடர்பில் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வது சுயாதீன தோர்தல் ஆணைக்குழுவினால் மட்டுமே. இதை விடுத்து ஏனைய கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்
Eelamurasu Australia Online News Portal