விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்க அரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11( Apollo 11) விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) நிலவில் முதல்முறையாக தனது கால் தடத்தை பதித்தார். இச் சாதனையின் நினைவுகளை பாதுகாக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், விண்வெளியில் முதல்முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட தடயங்கள், பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
Read More »செய்திமுரசு
யாழ்.மாநகர சபை வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021ஆம்ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி இழந்தார். அதன் பின் நடைபெற்ற மேயர் தெ ரி வி ல் ...
Read More »குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவுகாவல் துறை நிலையத்தில் 27.01.2020 இன்று முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் ரவிகரன் அவர்கள் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார். இந்த முறைப்பாட்டில் ரவிகரன் அவர்களுடன் ரைதுறைப்பற்று பிரதேசசபை ...
Read More »ஆஸ்திரேலியாவில் தற்காலிக இணைப்பு விசா!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளில் சுமார் 50 பேரை ஓராண்டு தடுப்புக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு விடுவித்திருக்கிறது. இவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளாவர். ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இந்த அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் குடிவரவுத் தடுப்பிலும் சிறைவைக்கப்பட்டிருந்தனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக இணைப்பு விசா வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 8 ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து ...
Read More »நினைவேந்தல் அங்கிகாரங்கள்!
நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது. உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. ...
Read More »டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியனாக இருப்பார்
டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகிய நிலையில், முன்னாள் அதிபர் அலுவலகத்தை புளோரிடாவில் திறந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்பதற்கு முன் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி, புளோரிடாவில் உள்ள பாம் பீச்சில் உள்ள அவருடைய கோல்ஃப் கிளப்பிற்கு சென்றார். அமெரிக்காவின் 45-வது அதிபரான டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபருக்கான அலுவலகத்தை அங்கு திறந்தார். இந்த நிலையில் அலுவலகம் சார்பில் டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியன் எனத் தெரிவித்துள்ளது. டொனால்டு டிரம்பின் டுவிட்டர் ...
Read More »நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த தயங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரத்தில் அரசதரப்பையும் எதிர்கட்சிகளையும் சேர்ந்த 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ள நிலையில் கொரேனாh வைரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் மேலும் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்;டுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிசிஆர் சோதனை விடயத்தில் அரசநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதளவும் ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
Read More »கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம்?
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப் பதற்கான காரணத்தை பொது சுகாதார அதிகாரிகள் பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். கொழும்பு மாநகர எல்லைக்குள் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கொழும்பு மாவட்டம் முழுவதும் பரவி காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி 24 ஆம் திகதி அன்று வெளியான கொரோனா அறிக்கையை ஆய்வு செய்யும் போது இந்த நிலைமை தெளிவாகிறது என வைத்தியர் ஹரித அலுத்கே ...
Read More »விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம் !
இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சி பெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரத்தைப் போட்டுத் தந்துள்ளது. அந்த அத்திவாரம் இன்றும் அப்படியே உள்ளது. அந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி எமக்கான தனித்துவமான ஈழ சினிமாவைக் கட்டியெழுப்புவதற்குத் திரைத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் இளங்கலைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஈழத்திரைச் ...
Read More »கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து பிரிட்டன் கவலை
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் பிரிட்டன் தனது கரிசனைகளை தெரிவித்துள்ளது என இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவர் சாரா ஹல்டன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அடுத்தவாரம் வெளியாகவுள்ள ஐநாவின் அறிக்கையில் இது குறித்து ஐநா மனித உரிமை பேரவைக்கான விபரங்கள் அடங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Read More »