செய்திமுரசு

சிறிலங்காவிற்கு அவுஸ்திரேலியா 89 மில்லியன் நிதியுதவி!

சிறிலங்காவின் தெற்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை அவுஸ்திரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளன. இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மூன்று வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Read More »

அவளின் இறப்பு எனது இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது!

தனது ஊக்கமளிக்கும் பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான நண்பர்களை கொண்டுள்ள 24 வயது மொடல் அழகி வயிற்று புற்றுநோயால் இறந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாரா அல்மிடா (24) என்ற மொடல் அழகிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிடும் நேர்மறையான பொன்மொழிகள் மற்றும் உலக நடப்புகள் அதிகளவில் அனைவராலும் கவரப்பட்டது . இதன் காரணத்தினாலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.5 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வயிற்று புற்றநோயால் பாதிக்கப்பட்ட இவர், ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இருந்து நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருத்து!

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் ...

Read More »

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை இன்று கையளிப்பு!

அரசாங்கத்திற்கு தாமதமாக்கும் நோக்கம் இல்லாமலிருந்தால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை 3 மாதத்திற்குள் விவாதத்திற்கு எடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக அனைத்தையும் கொண்டு வருவதற்கே நாம் முனைந்தோம். ஆனாலும் தற்போதைய அரசியல் ...

Read More »

முல்லைத்தீவில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா படை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் மக்கள் பயன்படுத்திய காணிகளை வேலி அடைக்கும் செயற்பாடு தொடர்பில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பகுதியில் இடப்பெயர்வுக்கு முன்னர் மக்கள் வசித்து வந்த நிலையில் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் பின்னர் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கமைய குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில்  ஏக்கர் பரப்பளவு காணியை அங்கு அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணியை படையினர் ...

Read More »

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!

கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம்   12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் ...

Read More »

போதைப்பொருள் கடத்த முயன்ற அவுஸ்திரேலியப் பெண்ணுக்கு மலேசியாவில் மரண தண்டனை!

மலேசியாவில் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணுக்கு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 54 வயதான மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்பேர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்திள் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குற்றந்நாட்டினை மறுத்த ...

Read More »

இலஞ்சம் வாங்கி அவுஸ்திரேலிய விசா கொடுத்த அதிகாரிகள்!

தென்னாபிரிக்காவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய விசாவைப் பெற்றுக் கொள்வதற்காக நைஜீரிய நாட்டினர் இலஞ்சம் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனை அடுத்து இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை 21 நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலிய மாணவர் விசாக்களை முறைகேடாகப் பெற்றுள்ளனர் என The Herald Sun செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள அவுஸ்திரேலிய ...

Read More »

உங்களுடன் பேச நாங்கள் ஒன்றும் கெஞ்சவில்லை! – வடகொரியா

லிபியாவை போல வடகொரியாவின் முடிவு இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரை முட்டாள் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இரு துருவங்களாக இருக்கும் வடகொரியா – அமெரிக்கா இடையே உள்ள பகை குறைந்த நிலையில், டிரம்ப் – கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என அமெரிக்க நிபந்தனை விதித்தது. இதனை அடுத்து, நிபந்தனைகளை ...

Read More »

இருந்துகொண்டு யாரும் எழுதலாம்! இறங்கிப் பாருங்கள்அருமை புரியும்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி பலரும் பலவாறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றுடன் விமர்சனங்களை விட்டுவிடுங்கள். சேறுபூசல்களை தவிர்த்திடுங்கள். முள்ளிவாய்க்கால் எனும் சொல்லை கேவலப்படுத்தாதீர்கள். இருந்துகொண்டு யாரும் எழுதலாம், இறங்கிப் பாருங்கள்அருமை புரியும். “முள்ளிவாய்க்கால்” ஈடுகொடுக்கமுடியாத இழப்புக்களையும், சொல்லொணாத் துயரங்களையும், ஆறாத வலிகளையும் எஞ்சிய எம்மவர்களிடம் விட்டுச் சென்றிருக்கின்றது. இந்நிகழ்வினை விமர்சித்து இழிவுபடுத்தாதீர்கள். சரியாயின் தட்டிக்கொடுங்கள், தவறென்றால் அதற்கான முறையில் எடுத்துக்கூறி சரிசெய்ய வழிவகை செய்யுங்கள். கடந்தகால நினைவேந்தல்களைப்போல அல்லாது, அனைவரையும் ஒன்றினைத்து இம்முறை ஒரே இடத்தில் நினைவேந்தலை நடாத்தியமை தமிழராகிய நாமனைவரும் பெருமைப்படவேண்டிய விடயம்! மாணவர்களுக்கும் ...

Read More »