வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை முறிந்துபோனால் தென் கொரியாவுடன் ராணுவ ஒத்திகைகள் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கி வந்த வடகொரிய தலைவர் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததுடன், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கும் முன்வந்தார். அதன்படி ஜூன் 12ம் திகதி சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. சமரச ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. அப்போது வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார். வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் ...
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!
ஜேஸன் ராயின் முத்தாய்ப்பான சதம், பட்லரின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், கார்டிப்பில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38 ரன்களில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. சதம் அடித்து அசத்திய ஜேஸன் ராய் ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றபின் அந்த அணி சந்திக்கும் 2-வது தோல்வியாகும். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. வரும் செவ்வாய்கிழமை நாட்டிங்ஹாமில் நடக்கும் 3-வது போட்டியில் இங்கிலாந்து ...
Read More »நியூசிலாந்து செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு வரி விலக்களிப்பு!
நியூசிலாந்து செல்லும் சுற்றுலாப் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து NZ$25 – NZ$35 வரையிலான தொகையை வரியாக அறவிட நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் அவுஸ்திரேலியர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அடுத்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து இம் முறையானது நடைமுறைக்கு வருகிறது என கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கும் Pacific Islands Forum நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் இதிலிருந்து விலக்களிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் வரை 3.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள், நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இதில் ...
Read More »காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது!
இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இலங்கை அரசு, விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தலை ஐநா வலியுறுத்துவதாக காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா கூறியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர்களது நிலமையை கருத்தில் கொண்டு விரைவான நடவடிக்கைக்காக காணாமல் ஆக்கப்பட்டடவர்களின் ...
Read More »அப்பாவாக இருப்பது எவ்வளவு சவாலானது தெரியுமா?
அப்பா… இந்த வார்த்தைக்குக் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். ஆனால், அது பிள்ளைகளின் பார்வையே! உண்மையில் அவர் மனசு என்ன?! பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு! 5 வயது – ‘என் சூப்பர் ஹீரோ!’ 10 வயது – ‘வீட்டில கொஞ்சம் கத்துவார்… மத்தபடி நல்லவர்தான்!’ 15 வயது – ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்… சொல்லிவைம்மா அவர்கிட்ட!’ 20 வயது – ...
Read More »கா.போ. பணியகத்தின் உறுப்பினர்கள் யாழ்,கிளி களப் பயணம்!
காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் அடுத்த மாதம் 13, 14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு களப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காகவுமே இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியக உறுப்பினர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தினர். அதன்பின்னர் மாத்தறை, திருமலை ஆகிய மாவட்டங்களிலும் அமர்வுகள் நடத்தப்பட்ட நிலையிலேயே 4ஆம், 5ஆம் கட்ட அமர்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன. இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது பெறப்பட்ட தகவல்களையும், ...
Read More »பப்புவா நியூ கினியாவில் கட்டுக்கடங்காத கலவரம்!
பப்புவா நியூ கினியாவின் சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்தில் கலவரம் வெடித்ததையடுத்து 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவின் சதர்ன் ஹைலேண்ட மாகாண கவர்னர் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோர்ட் தீர்ப்பும் அவருக்கு எதிராக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை கடும் வன்முறையில் ஈடுபட்டனர். மாகாண தலைநகரான மென்டியில் ஒரு விமானத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் சில கட்டிடங்களுக்கும் தீ வைத்தனர். நிலநடுக்க ...
Read More »நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு முக்கிய பதவி!
சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.காலாட்படை பணியக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முன்னர் 66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். இதன்போது, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் இவர் பிரதான ...
Read More »போர்க்குற்றவாளிகளில் ஒருவர் விரைவில் ஓய்வு!
இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவரும், போருக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ஒருவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். வன்னியில் இறுதிக்கட்டப் போரில், 58 ஆவது டிவிசனின் கீழ் கொமாண்டோ படைப்பிரிவுகளை வழி நடத்தியவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே. போரின் இறுதிக்கட்டத்தில், 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். போரில் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் வரிசையில் முக்கியமான ஒருவராக இடம்பிடித்திருந்த இவருக்கு எதிராக, பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க ...
Read More »வடகொரிய அதிபரிடம் எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்துள்ளேன்! -டிரம்ப்
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12–ந் திகதி நடந்தது. இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. முதலில் நேருக்கு நேரும், பின்னர் தூதுக்குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வாஷிங்டனில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கிம் ஜாங் உன்னுடன் நடந்த சந்திப்பு மிக முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை ...
Read More »