செய்திமுரசு

வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என பொலிஸார் தன்னிடம் தெரிவித்துள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்முறை சம்பவங்கள் தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து, வாராந்தம் அறிக்கையை தன்னிடம் சமர்பிக்க வேண்டும் எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்ற பொலிஸாருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழில் இயங்கும் ஆவா மற்றும் ...

Read More »

பிரதமராக இம்ரான் கான் 18-ம் திகதி பதவி ஏற்பு!

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றம் வரும் 13-ம் திகதி கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்கின்றனர். பிரதமராக இம்ரான் கான் 18-ம் திகதி பதவி ஏற்று கொள்கிறார். பாகிஸ்தான் நாடாளுன்றத்துக்கு கடந்த 25-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் ...

Read More »

வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்ல தடை!

நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி  காவல் துறை  ஊடாக கூறியிருக்கின்றது. இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் ...

Read More »

விஜயகலாவிடம் விசாரணை நிறைவு! – குற்றங்கள் தடுப்பு பிரிவு !

முன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன என, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு, நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. இதேவேளை, அவரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. ‘உத்தியோகபூர்வப் பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்து​ வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீ​ழ விடுதலைப் புலிகளின் காலத்தில், ...

Read More »

சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார்!

நாடாளுமன்ற  சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம், அரசமைப்பிலோ மற்றும் சம்பிரதாயத்தின் பிரகாரமோ அதிகாரமில்லையென, சபாநாயகர் கருஜயசூரிய, சபைக்கு அறிவித்தார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று (10) கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பின் போதே மேற்கண்டவாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது.

Read More »

குழந்தைகள் பலி! – விசாரணைக்கு ஐநா வலியுறுத்தல்!

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது. ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை விமானத்தில் ஏற்ற வேண்டாம்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படும்போது அவர்களை Qantas மற்றும் Virgin விமான நிறுவனங்கள் தமது விமானத்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானங்கள் ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 60 ற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அகதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடுகடத்தும் செயற்பாட்டிற்கு தமது நிறுவனம் துணைபோகாது என கடந்த ஜுன் மாதம் Virgin Atlantic அறிவித்திருந்தது. அதேபோன்று அமெரிக்காவின் ...

Read More »

விக்கியின் தெரிவுகள்!

அண்மையில் நடக்க இருக்கின்ற வடக்கு மாகாணசபை தேர்தலில் பின்வரும் மூன்று தெரிவுகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு காத்திருக்கின்றன, 01. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய கூட்டமைப்பு = விக்கியின் அரசியல் மரணம். 02. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + ஒட்டுக்குழுக்கள் (PLOT, TELO, EPRLF) = விக்கியின் அரசியல் மலினம். 03. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய மக்கள் முன்னணி = விக்கியின் அரசியல் மலரும். முதலாவது கூட்டை பொறுத்தவரையில் அந்த தெரிவு விக்கியின் அரசியல் ...

Read More »

ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கு இசையமைத்த ரமணன் காலமானார்!

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல ...

Read More »

சிறிலங்காவில் குற்றவியல் சட்டமூலம் நிறைவேற்றம்!

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்தச் (சட்டமூலம்) மீதான இரண்டாம் வாசிப்பு, மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு, 73 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளுமே அளிக்கப்பட்டன. மூன்றாவது வாசிப்பு, குழுநிலையில் வைத்து, நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால், திருத்தப்படுகின்றது. திருத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், 64 மேலதிக வாக்குகளினால் அந்த சட்டமூலம் ...

Read More »