ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. “நான் பார்க்கக்கூடிய பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் அவர்களது சட்ட அந்தஸ்து உறுதிச்செய்யப்படாததால் அரசின் Medicare அல்லது JobKeeper போன்ற நல உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுக்கு உணவு வழங்க ...
Read More »செய்திமுரசு
தாலிபான் எப்படி உருவாகிறது?
அமெரிக்கா இருபதாண்டுக் காலம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிலைநிறுத்தி “மக்களாட்சியை வளர்த்தெடுக்க” பெரும் முயற்சி செய்த பிறகு, நிரந்தரமாக அந்த நாட்டில் தங்கள் படைகள் தங்குவது வியாபாரத்துக்குக் கட்டுப்படியாகாது என்ற நிதர்சன உண்மையால் படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தது. உடனே எந்த தாலிபானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஆப்கானிஸ்தானை மீட்க அமெரிக்கா இருபதாண்டுகளுக்கு முன் படையெடுத்ததோ, அதே தாலிபான் “போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று உடனே மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. அமெரிக்கா நிறுவிய பொம்மை அரசின் தலைவர்கள் தப்பித்து ...
Read More »தலிபான்கள் கையில் சிக்கிய அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவிகள்
ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலிபான்களின் கையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஏராளமான ராணுவ தளவாடங்களை அங்கேயே ...
Read More »வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கு நடவடிக்கை
நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடினார்கள். அதனை தொடர்ந்து என்னோடு கலந்துரையாடினார்கள் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில் நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில் இன்று அந்த நெல்லை பறிமுதல் ...
Read More »ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிக்க தீர்மானம்!
பாடசாலை ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டத்தினால் உருவாகியுள்ள நிலைமைக்கு ஏனையசேவைகளிற்கு பாதிப்பு அற்றவிதத்தில் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஊடாக- திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய யோசனை- ஆசிரியர்கள் அதிபர்களின் நீண்டகாலப்போராட்டத்திற்கு தீர்வை காணமுடியும் மீண்டும் இணையவழி கல்வியை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் இது புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என இரண்டு அரச ...
Read More »அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா?
பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்குரிய ...
Read More »நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்கின்றன!
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1035 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 714 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் இருவர் இறந்துள்ளார்கள், ஒருவர் 70 வயதுகளில் மற்றவர் 80 வயதுகளில். தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டவர்கள் வயது வரம்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், 40 முதல் 49 வயதுடையவர்கள் விரைவில் தடுப்பூசி முடியும். மளிகை மற்றும் இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொற்று அதிகமாகப் பரவியுள்ள ...
Read More »கொரோனா தோன்றியது எங்கே?அமெரிக்க உளவு அமைப்புகள் தோல்வி
கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் எங்கே தோன்றியது என்பதை கண்டறிய அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறுகிற நிலைதான் இன்றளவும் நிலவுகிறது. உலகளவில் இந்த தொற்றினால் இதுவரையில் 21 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சத்து 06 ஆயிரத்து 244 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் குழப்பம் நிலவுகிறது. இது சீனாவின் வுகான் நகர மாமிச ...
Read More »வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உதவவேண்டும்- சுதர்சிணி பெர்ணான்டோபுள்ளே
இலங்கை கொரோனா வைரசிற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உதவவேண்டும் என மீண்டும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு மருத்துவமனைகளிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை அமைச்சரிடம் கையளித்தவேளை அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொவிட் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு கிசிச்சை வழங்குவதற்கான மருத்துவ உபகரணங்களை இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு வழங்கியுள்ளது. இந்த மருத்துவ உபகரணங்களை வழங்கியவர்கள் அவற்றை வடக்குகிழக்கு மருத்துவமனைகளிற்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த ...
Read More »தடுப்பூசி போட மறுப்பவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என காவல் துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சர் நிஹால் தலதுடுவ தெரிவித்தார். தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் ...
Read More »