ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிக்க தீர்மானம்!

பாடசாலை ஆசிரியர் அதிபர் சேவையை இணைந்த சேவையாக அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டத்தினால் உருவாகியுள்ள நிலைமைக்கு ஏனையசேவைகளிற்கு பாதிப்பு அற்றவிதத்தில் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ஊடாக- திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய யோசனை- ஆசிரியர்கள் அதிபர்களின் நீண்டகாலப்போராட்டத்திற்கு தீர்வை காணமுடியும் மீண்டும் இணையவழி கல்வியை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும் இது புதிய பிரச்சினைகளை உருவாக்கும் என இரண்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் ஆசிரியர் சேவைகள் பொதுச்சேவையின் கீழ் காணப்பட்டன ,ஆனால் அவற்றை இணைந்த சேவையாக அறிவிப்பதன் மூலம் சம்பளப்பிரச்சினைகள் இடமாற்றங்கள் ஏனைய பிரச்சினைகளிற்கு தீர்வை காணும்;போது தனியான தீர்மானங்களே எடுக்கப்படும்.

இணைந்தசேவையாக அறிவித்தால் அதிபர் ஆசிரியர் சேவையில் உள்ள ஊழியர்களை வேறு சேவைக்கு மாற்ற முடியாது என அரசாங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசிரியசேவையை மூடும் செயல்பாடுகள் அடுத்த சிலமாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வியமைச்சர் தினேஸ்குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நவம்பர் 20ம் திகதிக்கு முன்னர் ஆசிரியசேவையை இணைந்தசேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் நாட்டின் 4.3 மில்லியன் சிறுவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ஆசிரியர்களை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினை குறித்து ஆராய்ந்த நால்வர் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகவைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முடிவுகளால் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என இரு சிரேஸ்ட அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் இன்னமும் பிழையான முன்னுதாரணங்களை உருவாக்குகின்றது,என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாளை மருத்துவர்கள் தாதிமார்கள் அல்லது வேறு சேவையை சேர்ந்தவர்கள் தங்களை இணைந்தசேவையாக அறிவித்து தங்கள் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வை காணுமாறு வேண்டுகோள் விடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.