யாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் இன்று (18), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபைக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்கு எதிரில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், SMART LAMP POLE என்ற பெயரில் 5ஜீ தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கோஷங்களை எழுப்பினர். அத்தோடு ‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன், யாழ். முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், தம்மைச் சந்திக்க வேண்டுமென்றும் ...
Read More »செய்திமுரசு
புகைப்படம் வெளியிட்டு அசத்திய பிரியங்கா!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் பெண்களுக்கான உடை என்றால் முதலில் சொல்வது சேலைதான். எத்தனை விதமான நவநாகரீக உடை வந்தாலும் சேலைதான் பாரம்பரிய உடையாகும். பெண்களின் அழகை வெளிப்படுத்தும் உடையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டரில் கடந்த சில தினங்களாக “சாரி டுவிட்டர்” என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. சினிமா நடிகைகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என ...
Read More »ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் ...
Read More »ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய உத்தரவு!
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பலாத்காரத்துக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் ...
Read More »கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்!
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மீது சுடுநீர்த்தாக்குதல் உட்பட சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை ஆதரித்த பின்னர் ஏன் சிவனேசன், சிறிதரன், யோகேஸ்வரன் கன்னியாவுக்கு சென்றார்கள் ?, அவர்கள் எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், ...
Read More »விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது!
ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு; கேள்வி:- தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமையொன்று அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றீர்களா? பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியே மாற்றுத்தலைமை என்ற சொற்பதத்தினை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. எமது முன்னணி மட்டும் தான், போர் நிறைவடைந்ததன் ...
Read More »வடக்கு ஆளுநரை சந்தித்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்!
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் வடமாகாணத்தின் நீர் பிரச்சனை, அதனை தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘வடமராட்சி களப்பு’ திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. இதேவேளை இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு உள்நுழைய முயற்சிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சட்டவிரோத குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் ...
Read More »தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்!
பாகிஸ்தானில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் லண்டன் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு, இருவரும் நலமாக உள்ளனர். பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. குழந்தைகளின் மண்டையோடு, மூளை மற்றும் இரத்த நாளங்கள் என மிகவும் இக்கட்டான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டுள்ளனர். இதனால் குழந்தைகள் இப்போது நலமாக உள்ளனர். ...
Read More »ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மாணவர் பிணமாக மீட்பு!
ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற இந்திய மாணவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞர் போஷிக் சர்மா. இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தங்கி அங்குள்ள பல்கலைகழம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை சர்மாவும் அவரது நண்பர்களும் இணைந்து விக்டோரியா மாகாணத்தின் மேரிஸ்விலி பகுதியில் உள்ள பொழுதுபோக்கு விடுதிக்குச் சென்றனர். அந்த பொழுதுபோக்கு விடுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது சர்மாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ...
Read More »கன்னியா கோயிலுக்கு வழிபட சென்றோருக்கு தடை!
திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு பௌர்ணமி தினமான் இன்று (16) வழிபடச் சென்ற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கன்னியா பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கன்னியா பிள்ளையார் கோயிலுக்கு தவத்திரு அடிகளார் தலைமையில் பக்தர்கள் வழிபடச் சென்றபோது, ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக கூறி, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை காவல் துறையினர் கையளித்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் காவல் துறையினருகும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்போது, கன்னியா பிள்ளையார் ...
Read More »