லண்டனில் லாரி ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை வியட்நாமைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் ( 31 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்) கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் ...
Read More »செய்திமுரசு
தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பானது சரியான முடிவினை நிச்சயமாக அறிவிக்கும்!
எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் எமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு ...
Read More »செயல்வடிவமும் நம்பகத்தன்மையும்!
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட ஏனைய சில வேட்பாளர்களுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கி வருகின்றன. மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாயவிற்கும் பூரண ஆதரவினை தெரிவித்துள்ளன என்பதும் ...
Read More »நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துங்கள்..!
தாம் அதிகாரத்துக்கு வந்தால் தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்வாறான அணுகுமுறை முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் தெளிவான கொள்கையை வெளிப்படுத்தவேண்டும். வேட்பாளர்கள் ஒளிவு மறைவு இன்றி தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டியது அவசியமாகும். நாட்டில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்பதனை முதலில் பிரதான வேட்பாளர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன் அதற்கான தீர்வுத்திட்ட அணுகுமுறையை தெளிவாக வெளியிடவேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கின்றன. நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் சூறாவளிப் ...
Read More »அரசாங்கம் படுகொலையைச் செய்ததாக கூறிய கோத்தா!
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையும், நாட்டையும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் கோத்தபாய ராஜபக் ஷ காட்டிக்கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்த சுகாதார மற் றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, இவ்விவகாரத்தின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளா மல் சில ஊடகங்கள் தவறாகச் செய்திகளை வெளியிடுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஊடகவியலாளர் லசந்த ...
Read More »தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சம்!
தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை ...
Read More »பில்கேட்ஸுக்கு வந்த சோதனை!
உலக பணக்கார்கள் பட்டியலில் நீண்டகாலமாக முதலிடத்தில் நீடித்த பில்கேட்ஸ் 24 மணி நேரத்தில் நிலைதடுமாறிப் போனதை அறிந்து கொள்வோமா? அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அமெரிக்க கணினிசார் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் 1.25 பில்லியன் சொத்து மதிப்புடன் முதல் முறையாக அந்த பட்டியலில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 24 ...
Read More »தீபாவளி பண்டிகைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து, டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்பதை இந்தி மொழியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஸ்காட் மாரிசன் தீப ஒளி திருநாளை, தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரோடும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பையும், நம்பிக்கையையும் ...
Read More »யுத்த வெற்றிக்காக உரிமை கோரும் வேட்பாளர்கள்!
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருப்பவர்களில் பிரதான வேட்பாளர்களாக விளங்கும் கோத்தாபய ராஜபக்க்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் யுத்த வெற்றியை பிரதானமாகக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். இது தீவிரமடையும் பட்சத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஜனநாயகத்தன்மை இல்லாது போய் விடும் என்பதால் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது. எனினும் இதை மகிந்த அணியினர் விடுவதாக இல்லை. எந்த தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ...
Read More »கொழும்பில் கைதான 52 மாணவர்களுக்கும் பிணை!
கொழும்பில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 52 மாணவர்களையும் பிணையில் செல்ல கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறித்த மாணவர்கள் 52 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்ததுடன், கைதான மேலும் ஒரு மாணவனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
Read More »