செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் வருபவர் தனது ஆங்கிலப் புலமையை நிரூபிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதுவொருபுறம் இருக்க Test of English as a Foreign Language Paper-Based பரீட்சையை subclass 500 மாணவர் விசாவுக்காக ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. TOEFL Paper-Based பரீட்சையின் மூலம் ஒருவரின் ஆங்கிலம் பேசும் திறன் புலப்படுவதில்லை. இதன் காரணத்தினால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் இப்பரீட்சை முடிவினை ஏற்றுக்கொள்வதில்லை என ...

Read More »

யாழில் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் முன்னணி இணைய ஊடகவியலாளர் ஒருவரிற்கு நடுவீதியில் வைத்து கைத்துப்பாக்கி காட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. தனது மகனை பாடசாலைக்கென அழைத்துச்சென்றிருந்த குறித்த முன்னணி இணைய ஊடகவியலாளரை பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் சட்டநாதர் வீதி சந்தியில் கைத்துப்பாக்கியுடன் வழிமறித்த இருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்களுள் ஒருவர் வல்வெட்டித்துறை இராணுவ முகாமை சேர்ந்த புலனாய்வாளர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். மற்றொரு நபர் உடுப்பிட்டியைச் சேர்ந்த 26 வயதான ஜீவசங்கரி என்பவரே அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக ...

Read More »

இன்று திருமலையில் காணாமல் போனோருக்கான சந்திப்பு!

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது. திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமாக உள்ளதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30 வரை திருகோணமலையை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதையடுத்து, பிற்பகல் 12.30 முதல் ஒருமணிவரை ஊடக சந்திப்பும், பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக ...

Read More »

அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட ...

Read More »

1.1 மில்லியன் பெறுமதியான வீடு எரிந்து சாம்பலானது!

அவுஸ்திரேலியாவில் 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த வீடு சில மணி நேரத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது. விற்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane) நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். மேலும் குறித்த வீட்டுப் பெண் தனது நாயை வாக்கிங்கு அழைத்துக் கொண்டு வெளியே சென்றமையால் உயிர் சேதம் ஏற்படவில்லை. டிம்பர் மரத்திலான இரு வீடுகள் பற்றி எரிவதைப் ...

Read More »

டிரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் ...

Read More »

சபைக்கு தவராசாவிற்குரிய பணத்தை கொண்டு வந்த கிழக்கு மாணவர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எ திர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர். மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடைய ணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறிய எதிர்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை ...

Read More »

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே!

காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது. என காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கில் காணாமல் போனவர்களை மாத்திரம் கண்டுப்பிடிப்பது காணாமல் போனோர் அலுவலகத்தின் நோக்கமல்ல. தெற்கில் காணாமல் போனவர்களையும் கண்டுப்பிடிப்பதும் உறவுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அலுவலகத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வடக்கில் மாத்திரம் எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கிலும் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்த வண்ணமே காணப்படுகின்றன. அலுவலகம் அமைக்கப்பட்டு இதுவரை ...

Read More »

மனுஸ் தடுப்பில் உள்ளவர்களுக்கு 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு!

அவுஸ்திரேலிய அரசு வழங்கிய 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 1,700 பேருக்கு, பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்திற்கெதிராக கூட்டு சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில் மனுஸ் தடுப்பிலுள்ளவர்களுக்கு சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு அரசு முன்வந்திருந்தது. இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுன் 15ம் திகதிக்கு முன்னர் 1693 பேருக்கு குறித்த பணம் ...

Read More »

அர­சி­யல் கைதி­களை மீட்டெடுக்க ஆர்.பி.ஜி அல்ல ஆர்.ரி.ஐ சிறந்த ஆயு­தம்!

விசா­ர­ணை­கள் எது­வு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளுக்கு சிறந்த ஆயு­தம் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டம் என்று, தக­வல் அறி­யும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் கலா­ நிதி செல்வி திருச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தக­வ­ல­றி­யும் உரி­மைச் சட்­ட­மா­னது இலங்­கைக் குடி­மக்­கள் அனை­வ­ருக்­கும் உரித்­து­டை­யது. இந்­தச் சட்­டம் ஏனைய சட்­டங்­கள் அனைத்­தை­யும் விட மிக­வும் சக்தி வாய்ந்­தது. இதனை சிறந்த ஆயு­த­மாக கொண்டு தமிழ் அர­சி­யல் கைதி­கள் தாங்­கள் ஏன் இவ்­வாறு கார­ண­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று வினா எழுப்­ப­லாம். இந்­தி­யா­வில் இந்­தச் ...

Read More »