விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு சிறந்த ஆயுதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர் கலா நிதி செல்வி திருச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தகவலறியும் உரிமைச் சட்டமானது இலங்கைக் குடிமக்கள் அனைவருக்கும் உரித்துடையது. இந்தச் சட்டம் ஏனைய சட்டங்கள் அனைத்தையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை சிறந்த ஆயுதமாக கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் தாங்கள் ஏன் இவ்வாறு காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வினா எழுப்பலாம்.
இந்தியாவில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறைக் கைதிகள் வினா எழுப்பியதன் மூலம் அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, காரணமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.