செய்திமுரசு

மகிந்தவுடன் கைகோர்க்கும் 16 பேர்!

அரசாங்கத்தை விட்டு விலகிய 16 பேரும் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு அண்மையில் அரசாங்கத்தை விட்டு விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இந்த 16 பேரைக் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் சந்தித்திருந்தனர். எதிர்கால அரசியல் செயற்பாடுகளின் போது இணைந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ...

Read More »

50 பேரைத் தேடுகிறது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு காணாமற்போன 50 விளையாட்டாளர்களையும், அதிகாரிகளையும் தேடி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மேலும் 190 பேர் அடைக்கலம் நாடுவதாகவும் திரு. பீட்டர் டட்டன் கூறினார்.அவர்கள் பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் 15 பேர் வேறுவிதமான விசாக்களுக்கு விண்ணப்பித்ததாக அவர் கூறினார். தலைநகர் கென்பேராவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு. டட்டன் அதனைத் தெரிவித்தார். காணாமற்போன 50 பேரையும் கண்டுபிடித்து, அவர்களை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றி, சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – பேர்த்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று (18-05-2018) அனுஷ்ட்டிக்கப்பட்டது. மாலை 7.15 மணிக்கு திரு நிமல் தலமையில் அவுஸ்திரேலியா கொடியேற்றத்துடன் நினைவேந்தல் ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியா தேசிய கொடியினை பிரீமென்டல் நகரசபை உருப்பினர் திரு சாம் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியை திரு கொற்றவன் ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது பொதுச்சுடரை திரு இளையவன்னியன் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் சோக கீதங்கள் இசைக்க மக்கள் மனதுருகி தம் உறவுகளுக்காக மலரஞ்சலி செய்து தீபமேற்றினர். முள்ளிவாய்க்கால் ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – சிட்னி

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வானது, உணர்வெழுச்சியுடன் சிறப்பாகநினைவுகூரப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (18 – 05 – 2018) மாலை ஏழு மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தில் தொடங்கிய இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சுடரேற்றலின்போது, தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் இசைபின்னனியில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம்செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுநாள் பொதுப்பீடத்திற்கு, ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒரு மணிநேரமாகநடைபெற்றது. தொடர்ந்து நினைவுரையை, முள்ளிவாய்க்காலில் மருத்துவராக கடமையாற்றி ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 – மெல்பேர்ண்

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மே மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச் சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது. சென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து மீண்ட சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து இங்கு இடம்பெயர்ந்த ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் ...

Read More »

கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது – டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு வேலைக்கு ஆகாது என டிரம்ப் கூறியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. அணு ஆயுத ...

Read More »

யாழில் இடியுடன் கூடிய மழை! நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி!

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்தது எனக் கூறப்படுகிறது. இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.  

Read More »

முன்னாள் போராளி வீட்டில் ஆயுதமாம்!

அண்மைக்காலமாக பல இடங்களில் சிறிலங்கா  படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, தர்மபுரத்தில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலேயே படையினர் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். சிறிலங்கா விமானப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, கிளிநொச்சி நீதிவான் மன்றில் அனுமதி பெற்று இந்தத் ...

Read More »

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்!

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து அவுஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 8,103 பேர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் 7,848 பேர் மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெவ்வேறு விசாக்களுக்கு 200 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது bridging விசாவில் சட்டரீதியாக தங்கியிருப்பதாகவும் ...

Read More »

மனோகணேசனிற்கு துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருக!

சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சரான மனோகணேசனிற்கு துணிவிருந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் உங்களை பற்றி பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை. நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் , அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என பேசாது விடுகிறேன். தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்து பொறுமை காக்க மாட்டேன். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை ...

Read More »