முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று (18-05-2018) அனுஷ்ட்டிக்கப்பட்டது. மாலை 7.15 மணிக்கு திரு நிமல் தலமையில் அவுஸ்திரேலியா கொடியேற்றத்துடன் நினைவேந்தல் ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியா தேசிய கொடியினை பிரீமென்டல் நகரசபை உருப்பினர் திரு சாம் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியை திரு கொற்றவன் ஏற்றிவைத்தார்.
கொடியேற்றத்தை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது பொதுச்சுடரை திரு இளையவன்னியன் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் சோக கீதங்கள் இசைக்க மக்கள் மனதுருகி தம் உறவுகளுக்காக மலரஞ்சலி செய்து தீபமேற்றினர்.
முள்ளிவாய்க்கால் நினைவுரையினை மெல்பேர்ண் நகரில் இருந்து வருகை தந்த ஈழப்போரில் இறுதிவரை களமாடிய போராளியான திரு கொற்றவன் நிகழ்த்தினார். சிறப்புரையினை பிரீமென்டல் நகரசபை உறுப்பினர் திரு சாம் நிகழ்த்தினார்.
நிறைவாக இருநாட்டு தேசிய கொடிகளின் இறக்கங்களுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுற்றது.