செய்திமுரசு

வன்னியில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு!

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக,பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, பல்வேறு வகைகளைச் சேர்ந்த 5,442 குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவென தெரிவிக்கப்படுகிறது. முடிவடைந்த 2 ½ வருட காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 532,391 மீற்றர் நிலப்பகுதிகள் துளையிடப்பட்டு இவ்வாறு ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் குண்டுகள் ,ஆர்.பீ.ஜீ, ...

Read More »

புதிய அரசமைப்புக்கான மூல வரைவினால் சபையில் சலசலப்பு!

புதிய அரசமைப்புக்கான மூல வரைவு ​தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. மூல வரையில் மூன்று பேரை கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அந்த கையொப்பத்தில் ஒன்று, போலியான​து என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், முக்கியமான விவாதமொன்று இன்று (19) நடைபெறவுள்ளது. அதனை குழப்பியடிக்கும் செயற்பாடாகவே, ...

Read More »

கிம் ஜாங்-உன்: திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன். பொதுவாக நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை பார்வையிடும்போது அங்குள்ள அதிகாரிகளை பாராட்டுவதை கிம் ஜாங்-உன் வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணி 70 சதவீதமே நிறைவடைந்துள்ளதை கண்டு கிம் ‘பேச்சற்று’ போனதாகவும், மேலும் ஓட்டல் ஒன்றில் ‘மீன் தொட்டிகளைவிட மோசமான நிலையிலுள்ள’ குளியல் தொட்டிகளை கண்டு அவர் ‘அதிர்ச்சியடைந்ததாகவும்’ அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அணுஆயுதங்களை உருவாக்குவதற்கு அடுத்து, தனது பொருளாதார வளர்ச்சிக்கு ...

Read More »

மனித இனமே கலப்பு இனம்தான்! பிறகு எப்படிப் பிரிக்கமுடியும்?

ஹொமோ இரக்டஸ் இனத்திலிருந்து மற்ற இரண்டு இனங்கள் தோன்றி 5 லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த இரண்டு இனங்களும் மனிதர்களைப் போன்றதொரு தோற்றம். 150 ஆண்டுகளுக்குமுன் டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற புத்தகத்தில் மனித இனத்தின் வளர்ச்சி பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு மரத்தைப் போன்றதென்று கூறியிருந்தார். அவரது கூற்றின்படி மனித இனம் பொதுவான ஓர் இனத்திலிருந்து பிரிந்த பல்வேறு கிளை உயிரினங்களாகும். “ஹோமோ இரக்டஸ்” (Homo erectus) என்ற பொது மூதாதையிலிருந்து நியாண்டர்தால் (Neanderthal) மற்றும் ஹோமோ சேபியன்களான (Homosapiens) ...

Read More »

ஆஸ்திரேலிய கடல்வழியை பரிசோதித்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக்கடலில் சிக்கினர்!

இந்தோனேசியா/ ஆஸ்திரேலியா: படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சியில் ஈடுபட்ட ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியா எல்லையை நெருங்கியிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.  இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேரையும் சீனாவை சேர்ந்த 7 பேரையும் கொண்டிருந்த அப்படகு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை ஆளும் டர்ன்புல் அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாத மத்தியில் இப்படகு திருப்பி அனுப்பப்பட்டதாக ‘தி டெய்லி டெலிகிராப்’ என்ற ஆஸ்திரேலியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 2017க்கு பிறகு, ஆஸ்திரேலியா எல்லைக்கு ...

Read More »

‘நாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது’!-தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தங்கள் சந்தித்த இன்னல்களையும், முக்குளிப்பு வீரர்கள் தங்களை கண்டறிந்த ‘அற்புத தருணம்’ குறித்து முதல் முறையாகப் பேசியுள்ளனர். ஆங்கிலம் பேசத்தெரிந்த, அந்தக் கால்பந்து குழுவின் 14 வயதாகும் அதுல் சாம் எனும் சிறுவன், பிரிட்டன் முக்குளிப்பு நிபுணர்கள் தங்களைக் கண்டறிந்தபோது தங்களால் ‘ஹலோ’ மட்டுமே சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார். அவர்களை மீட்ட தாய் கடற்படை குழுவினருடன் சியாங் ராயில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கால்பந்து சீருடையில் இருந்தனர். புதன்கிழமை அன்று ...

Read More »

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்!

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட அனைவரும் இன்று வீடு திரும்பினர்.

Read More »

தாய்லாந்து: குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஊடகங்களை சந்தித்து பேச ஏற்பாடு!

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் (ஜூன்) 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.  9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ...

Read More »

யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S .A எழுத்துப்பதித்த தங்க மோதிரம் !

யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றயதினம் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டிலிருந்து எஸ்.ஏ (S.A) என ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தாபோதும் அவ்விடயத்தினையும் அதிகாரிகள் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ் கோட்டையை இராணுவத்திடமிருந்து கைப்பற்றி புலிக்கொடி ஏற்றிய விடுதலைப் புலிகள் அக் கோட்டை தமிழரின் அடிமைச் சின்னம் எனக் கருதி அதனை கைதிகளைக் கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் ...

Read More »

அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி 5 வயது சிறுவன்!

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன், உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை விட்டுவிட்டு, சிறுவனின் பாட்டி வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே, கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ...

Read More »