அவுஸ்திரேலியாவில் இரண்டு பேர் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் தர்ணகுல்லா என்ற நகரம், தங்க சுரங்க நகரம் ஆகும். இங்கு பிரெண்ட் ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு அங்குள்ள ஒரு இடத்தில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர்கள் தோண்டியபோது, அதில் 2 ...
Read More »செய்திமுரசு
சூறையாடப்படுமா அமெரிக்கத் தேர்தல்?
பின்வரும் வாக்கியத்தை நான் எழுதவோ படிக்கவோ செய்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டேன்: இந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவால் முதன்முறையாக சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த முடியாமல் போகலாம். அமெரிக்க அஞ்சல் துறையைத் தற்போதைய ட்ரம்பின் நிர்வாகம் முடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதால், அமெரிக்காவில் பாதிப் பேர் தங்கள் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று நினைக்கக்கூடும். மீதமுள்ள பாதிப் பேர் அஞ்சல் வழியாக ஜோ பிடனுக்குக் கிடைக்கும் வாக்குகள் போலியானவை என்று அமெரிக்க அதிபரால் நம்ப வைக்கப்படக்கூடும். அது வெறுமனே இதைப் பிரச்சினைக்குரிய தேர்தலாக மட்டும் ...
Read More »இரண்டு ஏவுகணைகளை செலுத்தி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா
அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தென்சீனக் கடலில் விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் உள்ளிட்ட 2 ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு உள்ளது. சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் ...
Read More »யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;ஷவினால் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. இலங்கையிலுள்ள பல்கலைக் ...
Read More »அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குற்றவாளிக்கு பரோல் இல்லாது ஆயுள் தண்டனை!
நியூசிலாந்தின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 51 முஸ்லிம் வழிபாட்டாளர்களைக் கொலைசெய்த நபருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது போன்ற தண்டனை நியூஸிலாந்தில் வழங்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும். 29 வயதான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ரெண்டன் டாரன்ட் என்ற மேற்படி குற்றவாளி, 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத செயலைச் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக் கொண்டார். தண்டனையின் போது அவர் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளார். ப்ரெண்டன் ...
Read More »கொரோனாவால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நியூசிலாந்தின் தற்போதைய நிலை என்ன?
கொரோனாவை வெற்றிகொண்ட நாடு என நியூசிலாந்து பெருமையாகப் பேசப்பட்டது. ஆனால் திடீர் கொரோனா பரவல் காரணமாக அந்த நாட்டின் பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் நியூசிலாந்தின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து நியூசிலாந்தின் தலைநகரிலிருந்து விளக்குகின்றார் பிரபல எழுத்தாளர் நியூசிலாந்து சிற்சபேசன் நன்றி தினக்குரல் இணையம்
Read More »தமிழர்களே தொன்மைக் குடிகள்! -, தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொதித்துப்போயுள்ளார்கள்!
புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென்இலங்கை அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பாராளுமன்றில் பேசத்தகாத வார்த்தைகள் எதனையும் பேசவில்லை. இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் ஆதிக்குடிகள் என்பதையும், தனியானதொரு தேசம் என்பதையுமே வலியுறுத்தியிருந்தார்கள். இதற்கே, தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொதித்துப்போயுள்ளார்கள். இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் வரலாற்று உண்மைகள். இவை பேரினவாதிகளின் கூச்சல்களால் ஒருபோதும் இல்லை என்றாகிவிடாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ...
Read More »ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது
ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பு ஆஸ்திரேலியாவில் 25,000-ஐக் கடந்துள்ளது. விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் கரோனா பாதிப்பு பரவலாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 25,067 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 525 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய ...
Read More »அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!
இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாந்து நகரில் 1964-ல் அக்டோபர் 20 அன்று பிறந்த கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம் சென்னை என்றுதான் பெரும்பாலான ...
Read More »கரோனா: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த கிம்
கரோனா வைரஸ் மற்றும் புயல் தொடர்பாக வடகொரிய அதிகாரிகளுக்கு அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க, கரோனா பரவல் மற்றும் வடகொரியவைத் தாக்கவிருக்கும் புதிய புயல் குறித்து அதிகாரிகளிடம் கிம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில், “வடகொரிய அதிகாரிகளுடன் இணைந்து கிம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது கிம் கையில் சிகரெட் வைத்திருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் கிம் அதிகாரிகளுடன் என்ன ஆலோசித்தார் என்ற முழுமையான தகவல் ...
Read More »