ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பு ஆஸ்திரேலியாவில் 25,000-ஐக் கடந்துள்ளது. விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் கரோனா பாதிப்பு பரவலாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 25,067 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 525 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய மக்கள் கரோனாவுக்கான அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருந்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தியுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று தற்போது தீவிரமாக உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
Eelamurasu Australia Online News Portal