செய்திமுரசு

கொரோனா பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்துக்கு முதலிடம்!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளின் பட்டியலில், நியூஸிலாந்து முதலிடம் பிடித்துள்ளது. சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது. 98 நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் நோய் கட்டுப்பாடு, அரசியல் செயல்பாடு, பொருளாதார நிலை பராமரிப்பு ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது. இதில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்து ...

Read More »

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கு பற்றாக்குறை!

ஜேர்மனியில்  ஏப்பிரல் வரை  கொரோனா தடுப்புமருந்திற்கு தட்டுப்பாடு காணப்படும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். தடுப்புமருந்திற்கான தட்டுப்பாடு காரணமாக மிகவுமசவாலான பத்து வாரங்களை நாங்கள் எதிர்கொள்ளப்போகின்றோம் என சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கான தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் மருந்துதயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியாளர்கள் அரசியல்வாதிகளுடன் தடுப்பு மருந்து தொடர்பான உச்சிமாநாட்டை நடத்தவுள்ளார். இன்றைய மாநாட்டின் போது மருந்து உற்பத்தி தொழில்துறைக்கு எவ்வாறான  உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து ஆராய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ...

Read More »

46 வது அமெரிக்க ஜனாதிபதியும் 46 வது ஐநா கூட்டத்தொடரும்

உலகம் இனவாதம் மற்றும் அது தொடர்பான தீவிரவாதங்களுக்கு எதிரான ஒரு அணியையும் மதவாதம் உள்ளிட்ட தீவிரவாதங்களை மூலதனமாகக் கொண்டு பயணிக்கும் மாற்று அணிக்கும் இடையிலான சவால்கள் நிறைந்த போக்குகளையே எதிர்காலத்தில் காணப்போகிறது. ஜோ பைடனின் வருகை மற்றும் அவரது பிரகடனம் குறிப்பாக இனவாதத்துக்கு எதிரான உள்நாட்டு தீவிரவாதத்துக்கு எதிரான முழக்கங்கள் எதிர்காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அரசியல் நிகழ்ச்சி நிரலை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பெனிஸண்டோய்ஸ் உள்ளிட்ட முற்போக்கு எண்ணங்களை கொண்ட பலர் அணிவகுத்து நின்றனர். மறுபக்கத்தில் உலகின் பிற்போக்கு ...

Read More »

சிறைச்சாலையிலுள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி

சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உற வினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என சிறைச் சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தேவையான பரிந்துரைகளை வழங் குமாறு சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி களைப் பார்க்க நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படும். வாரத்திற்கு ஒரு நாள் மாத்திரம் கைதிகளைப் பார்வை யிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச் சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளைப் பார்க்க வருகை தரும் ...

Read More »

சிறைக் கொத்தணியிலிருந்து இன்று 56 கொவிட்-19 தொற்றாளர்கள்

சிறைக் கொத்தணியிலிருந்து இன்று கைதிகள், சந்தேக நபர்கள் அடங்கலாக 56 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 51 ஆண் சந்தேக நபர்களும் 04 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியும் அடங்குகின்றனர். தற்போது 223 கைதிகளும் 5 சிறை அலுவலர்களும் கொவிட்-19 சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 4143 கைதிகளும் 129 சிறை அலுவலர்களும் குணமடைந்து சென்றுள்ளனர். இதேவேளை சிறைச்சாலை கொத்தணியிலிருந்து இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

9 மாத சிசு உட்பட குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா

கிண்ணியா- குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட காக்காமுனை கிராம சேவகர் பிரிவில், 9 மாத சிசு உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (28) உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம் அஜித் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை நீதிமன்றத்தில் பணிபுரியும் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், கடந்த 21ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்தார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட தொற்று ...

Read More »

மசூதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார்- 16 வயது இளைஞர் சிங்கப்பூரில் கைது

2019 இல் நியுசிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்று தாக்குதல்களை முன்னெடுக்கப்பட்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிறைஸ்சேர்ச் மசூதி படுகொலைகள் நினைவுதினத்தின் போது ( மார்ச்) அவர் இரண்டு மசூதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள கைதுசெய்யப்பட்ட இளைஞன் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் வேறு எவரினதும் உதவியின்றி தன்னை தானே தீவிரவாதமயப்படுத்தியுள்ளார்,என தெரிவித்துள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் இஸ்லாம் மீதான வெறுப்பும் வன்முறை மீதான காதலும் இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ...

Read More »

மிகச்சரியான மாற்றம்

தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை ...

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டவை

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டிருப்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களிற்கே தடுப்பு மருந்தினை வழங்கவுள்ளதாக பொதுமக்கள் சுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சுசி பெரேரா தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களிற்கு நோய் அறிகுறிகள் குறைவாக காணப்படு;ம் இதன் காரணமாக உயிரிழப்புகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார். 20வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கர்ப்பிணிப்பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள சுசி பெரேரா இந்த பிரிவில் அடங்குபவர்களிற்கு கொரோனா ...

Read More »

அரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு

கடந்த 2020-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களுள் ஆகாஷ் சிங் ரத்தோர் எழுதிய ‘அம்பேத்கர்’ஸ் ப்ரியாம்பில்’ பரவலான கவனத்தைப் பெற்றது. ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு ரகசிய வரலாறு’ என்று தனது புத்தகத்துக்குத் துணைத்தலைப்பு இட்டிருந்தார் ஆகாஷ். அரசமைப்பின் திறவுகோல் என்று வர்ணிக்கப்படுவது அதன் முகப்புரை. ஜவாஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட குறிக்கோள் தீர்மானமே அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைந்தது என்று கூறப்படுகிறது. முகப்புரை உருவாக்கத்தில் அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ், அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புகளைக் குறித்து கேள்விகளை ...

Read More »