சிறைக் கொத்தணியிலிருந்து இன்று கைதிகள், சந்தேக நபர்கள் அடங்கலாக 56 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 51 ஆண் சந்தேக நபர்களும் 04 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியும் அடங்குகின்றனர்.
தற்போது 223 கைதிகளும் 5 சிறை அலுவலர்களும் கொவிட்-19 சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 4143 கைதிகளும் 129 சிறை அலுவலர்களும் குணமடைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை சிறைச்சாலை கொத்தணியிலிருந்து இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal