சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உற வினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என சிறைச் சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தேவையான பரிந்துரைகளை வழங் குமாறு சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி களைப் பார்க்க நெருங்கிய உறவினர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
வாரத்திற்கு ஒரு நாள் மாத்திரம் கைதிகளைப் பார்வை யிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச் சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளைப் பார்க்க வருகை தரும் உறவினர்கள் உணவு கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கைதி களுக்கு ஆடைகள் மாத்திரம் கொண்டுவர அனுமதிக்கத் தீர்மானித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal