கிண்ணியா- குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட காக்காமுனை கிராம சேவகர் பிரிவில், 9 மாத சிசு உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (28) உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம் அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை நீதிமன்றத்தில் பணிபுரியும் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், கடந்த 21ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட தொற்று அறிகுறியின் அடிப்படையில், அவர் இன்று அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரது மனைவி, 9 மாத சிசு மற்றும் 5 வயதுக் குழந்தை ஆகியோரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal