செய்திமுரசு

திமிர் பிடித்த இந்தியா ! -இம்ரான் கான்

இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தானுக்கிடையே உள்ள பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து. அதனையடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேச இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீரில் மூன்று பொலிஸாரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச ...

Read More »

மாகந்­துரே மதுஷின் உத­வி­யுடன் என்னைக் கொலை செய்ய திட்டம்! – கோத்தபாய

பாதாள உலக குழுத் தலைவர் மாகந்­துரே மதுஷின் உத­வி­யுடன் தன்னைக் கொலை செய்­வ­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­மான தகவல் கிடைத்­துள்­ளது என்று முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பல்­வேறு நம்­ப­க­மான வழி­களினூடாக சரி­பார்த்துக் கொண்­டதில், இத் தகவல் உண்­மை­யா­னது என்று தெரிய வந்­துள்­ளது. அதற்குப் பின்னர், எனக்கு முழு­மை­யான எண்­ணிக்கை கொண்ட பாது­காப்பு அணியை மீளப்­பெ­று­வது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் பேசினேன். எனது பாது­காப்பு அணி பாதி­யாகக் குறைக்­கப்­பட்டு விட்­ட­தாகக் ...

Read More »

யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம்!

யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து மூன்றம் கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று , அரசியல் கைதிகளை விடுதலை செய் , பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுப்பட்டுள்ளது.

Read More »

அகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா

இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என  எம் ஐ ஏ அழைக்கப்படும் ரப் இசைப்பாடகி மாதங்கி( மாயா ) அருள்பிரகாசம்  வேண்டுகோள் விடுத்துள்ளார் கடந்த சில வாரங்களில் 12 இலங்கையர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் இது குறித்து கார்டியனிற்கு தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடத்தப்படும் விதம் குறித்த செய்திகள் பயங்கரமானவையாக ...

Read More »

மெக்சிகோவில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

மெக்சிகோவில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாடு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு அங்கு 11 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 2016-ம் ஆண்டும் 11 பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை. இந்த நிலையில் அங்கு சியாபஸ் மாகாணத்தின் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 நபர்கள் அவரை ...

Read More »

எனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடியாது!-மஹிந்த ராஜபக் ஷ

எனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த ராஜபக் ஷ கூறுகிறார்  நான் சர்­வா­தி­கா­ரி தான் – வடக்கில் தேர்­தலை நடத்­தினேன் பொரு­ளா­தா­ரத்தை பாது­காப்­பதில் அர­சாங்கம் தோல்வி தேர்­தலில் மாற்று அர­சை உரு­வாக்கப் போராட்டம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து சதித்­திட்டம் தீட்­டு­வதில் தற்­போ­தைய அர­சாங்கம் சிறந்த அனு­ப­வ­சா­லி­யாக விளங்­கு­கின்­றது. வேறு எந்­த­வொரு உலக நாடோ எம்மை வழி­ந­டத்த முடி­யாது. எனவே எனது அர­சியல் நட­வ­டிக்­கை­களை இந்­தி­யா­விற்கோ அல்­லது வேறு எந்­த­வொரு நாட்­டிற்கோ தீர்மா­னிக்க முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ...

Read More »

சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு? சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி. சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு? கூட்­ட­மைப்பபை பதிவு செய்ய வேண்டும் இந்­தி­யா­வுடன் நல்­லு­றவு உள்­ளது முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் மீண்டும் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது என்று குறிப்­பிட்­டவர் வட­மா­காண ...

Read More »

நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை!

திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொறுப்பெடுக்க முற்பட்டது சர்ச்சையை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிஷ்டசாலியை Powerball நிறுவனம் தேடுகிறது. டஸ்மேனியாவில் உள்ள ஒருவருக்கே குறித்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவரது தொடர்பு விவரத்தை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் அவரை தங்களால் தொடர்புகொண்டு வெற்றிச்செய்தியை அறிவிக்கமுடியாது இருப்பதாக Powerball நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற சீட்டிழுப்பில் ஒருவர் மாத்திரமே முழுத் தொகையையும் வெற்றிகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற Oz Lotto jackpot சீட்டிழுப்பில் 30 மில்லியன் டொலர்களை வென்ற நியூ சவுத் வேல்ஸ் நபர் இதுவரை ...

Read More »

உணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்

மினுவாங்கொடை பகுதியில் உட்கொண்ட உணவு விசமானதால் 100 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   மினுவாங்கொடை பகுதியில் இயங்கிவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை  காவல் துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More »