இன்று (8) தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் திருமுருகன் காந்தியையும் 3 தோழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி யாழில் கவனயீப்பு போராட்டம் நடைபெற்றது.
Read More »செய்திமுரசு
நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அவுஸ்ரேலியா அரசு பச்சைக்கொடி
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய ஒரு நிலக்கரி சுரங்க க் கட்டுமானத்தை மேற்கொள்ள இறுதி முதலீட்டு ஒப்புதலை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்தில், 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை,(12.3பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தை அறிவிக்கும் விதமாக இந்த முடிவு உள்ளது என கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் முன்கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த சுரங்கத் திட்டம் முதலீட்டை உருவாக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் ...
Read More »குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை 1 முதல் சம்பள உயர்வு!
அவுஸ்ரேலியாவில் ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.3 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை 1 முதல் நாடுமுழுவதுமுள்ள 2.3 மில்லியன் பணியாளர்கள் வாரமொன்றுக்கு 22.20 டொலர்கள் கூடுதலாகப் பெறவுள்ளனர். இதுவரை காலமும் பணியாளர் ஒருவருக்கு மணித்தியாலமொன்றுக்கு வழங்கவேண்டிய ஆகக்குறைந்த சம்பளமாக 17.70 டொலர்கள் காணப்பட்ட நிலையில், அது தற்போது 18.29 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் ஆகக்குறைந்த வாராந்த சம்பளம் 694.90 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைசெய்யும் hospitality, retail, pharmacy மற்றும் ...
Read More »அவுஸ்ரேலிய காவல் துறையால் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணில், பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த ஆயுததாரியொருவரை, நேற்று (05) பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த நபர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற மோதலில், மூன்று அதிகாரிகளை, குறித்த நபர் சுட்டிருந்தார். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர், ஆயுததாரி நடவடிக்கையில் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து அவுஸ்ரேலிய காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். செல்வந்த கடற்கரையோர புறநகரான பிரைட்டனிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலேயே அதிகாரிகள் சுடப்பட்டதாகத் தெரிவித்தகாவல் துறை , துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்து இறந்தபடி வேறொரு நபரொருவர் மீட்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். அவசர சேவைகளுக்கு, ...
Read More »அவுஸ்ரேலியா – வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள அவுஸ்ரேலியா, வங்காளதேசம் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் அவுஸ்ரேலிய பந்துவீச்சை சமாளித்து நேர்த்தியாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ...
Read More »வங்காளதேசத்தை 182 ரன்களில் சுருட்டியது அவுஸ்ரேலியா!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அவுஸ்ரேலிய அணி, வங்காளதேச அணியை 182 ரன்களுக்குள் சுருட்டியது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள அவுஸ்ரேலியா, வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் அவுஸ்ரேலிய பந்துவீச்சை சமாளித்து நேர்த்தியாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை ...
Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: அவுஸ்ரேலியா – வங்காளதேசம் இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. அவுஸ்ரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி அதில் மழையால் தோல்வியில் இருந்து தப்பித்து தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டது. வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு ...
Read More »கொதிக்கும் தண்ணீரால் உயிரிழந்த குழந்தை!
அவுஸ்திரேலியாவில் இரண்டு வயது மகளை கொதிக்கும் நீரில் குளிக்க வைத்த காரணத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் Brisbane நகரை சேர்ந்தவர் Shane David Stokes (30) இவர் மனைவி Nicole Betty More (23). இவர்களுக்கு Maddilyn-Rose (2) என்னும் மகள் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் Maddilynயின் பெற்றோர் அவரை கொதிக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் குளிக்க வைத்துள்ளனர். இதில் சூடு தாங்காமல் திணறிய Maddilynக்கு கால், முதுகு என உடலில் பல இடங்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ...
Read More »திருமணத்திற்கு எந்த உடை அணியலாம்? – 93 வயதாகும் சில்வியா
அவுஸ்திரேலியாவில் 93 வயது மணப்பெண் ஒருவர் திருமணத்திற்கு எந்த உடை அணியலாம் எனக் கேட்டு பதிவேற்றியுள்ள பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் குடியிருந்து வருபவர் 93 வயதாகும் சில்வியா. இவர் தற்போது தமது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து திருமண நாளில் எந்த உடை அணியலாம் என சில புகைப்படங்களை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இணையவாசிகளிடம் வினவியுள்ளார். 93 வயதாகும் சில்வியா 88 வயதாகும் பிராங்க் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். ...
Read More »ஊர்காவற்துறையில், கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் தொல்லியல் சின்னங்கள்!
தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், அதில் உல்லாச விடுதியினையும் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு இருக்கின்ற நிலையில் மேற்படிச் சின்னங்களை சேதப்படுத்தல், அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல், அதனை உரிமை கோரல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறைக் கடற்கோட்டையானது போர்த்துக்கேயரினால் 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பழமை வாய்ந்த கோட்டையாகும். இக்கடற்கோட்டையினை கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தியதுடன், தற்போது உல்லாச விடுதியினை நடத்துவதன் மூலம் அதிகளவிலான ...
Read More »
Eelamurasu Australia Online News Portal