நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அவுஸ்ரேலியா அரசு பச்சைக்கொடி

அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய ஒரு நிலக்கரி சுரங்க க் கட்டுமானத்தை மேற்கொள்ள இறுதி முதலீட்டு ஒப்புதலை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியுள்ளது.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்தில், 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை,(12.3பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தை அறிவிக்கும் விதமாக இந்த முடிவு உள்ளது என கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் முன்கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த சுரங்கத் திட்டம் முதலீட்டை உருவாக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் விமர்சகர்கள் இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறார்கள்.

“நீதிமன்றங்களிலும், உள்நாட்டில் வீதிகளிலும் மற்றும் வங்கிகளின் வெளிப்புறங்களிலும் , ஆர்வலர்கள் எங்களுக்கு சவால் விடுத்தனர்,” என்று அதானி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார். ”நாங்கள் தற்போதும் ஆர்வலர்களை எதிர்கொண்டுவருகிறோம். ஆனால் நாங்கள் இந்தத் திட்டத்தில் உறுதியோடு உள்ளோம்,” என்றார்.