அவுஸ்ரேலியாவில் ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.3 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜுலை 1 முதல் நாடுமுழுவதுமுள்ள 2.3 மில்லியன் பணியாளர்கள் வாரமொன்றுக்கு 22.20 டொலர்கள் கூடுதலாகப் பெறவுள்ளனர்.
இதுவரை காலமும் பணியாளர் ஒருவருக்கு மணித்தியாலமொன்றுக்கு வழங்கவேண்டிய ஆகக்குறைந்த சம்பளமாக 17.70 டொலர்கள் காணப்பட்ட நிலையில், அது தற்போது 18.29 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் ஆகக்குறைந்த வாராந்த சம்பளம் 694.90 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைசெய்யும் hospitality, retail, pharmacy மற்றும் fast-food துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் penalty rates உடனான அதிக கொடுப்பனவு எதிர்வரும் ஜுலை 1 முதல் 5 வீதத்தால் குறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.