இந்திய தொடரின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா அணி இலங்கை, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இழந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டின் வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அந்த அணி நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால் அவுஸ்ரேலியா புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இருந்தாலும் ஆசிய மண்ணில் அந்த அணி பெரிய வெற்றி பெற்றதில்லை. 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இந்தியாவை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சந்திக்க ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலியாவில் தமிழ் தேசியமொழியாக்கப்படுகின்றது!
அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அரசாங்கம் அறிவிக்கவேண்டுமென அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொறீசியஸ், கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் தமிழ் மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்படுவது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
Read More »இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் – ஸ்மித்
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று அவுஸ்ரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு அவுஸ்ரேலியா அணியின் கப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘இந்தியா தொடரில் இந்த அணியின் முக்கிய குழுதான் பங்கேற்க போகிறது. எங்கள் அணியின் சிலர்தான் ...
Read More »மெல்போர்னில் தமிழர் விளையாட்டு விழா
ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 வீரர்களின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” இன்று (8) மெல்போர்னில் நடக்கிறது. ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்பு குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 பேரின் நினைவாக நடத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017” ஜனவரி மாதம் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிழக்கு புர்வுட் ரிசர்வ் (East Burwood Reserve) மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம், ...
Read More »மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 7ஆம் ஆண்டு வணக்க நாள்
2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார். ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது. யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு ...
Read More »இந்தோனேசிய இராணுவ வீரர்களைச் சேர்த்துக்கொள்ளும் திட்டதை அவுஸ்ரேலியா மறுப்பு
இந்தோனேசியாவின் ஆகச் சிறந்த இராணுவ வீரர்களைச் சேர்த்துக்கொள்ள,அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துவருவதாகக் வெளிவந்த குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவுஸ்ரேலியா வுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் தருவாயில் இருப்பதாக, அவுஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் Marise Payne கூறினார். அந்த விவகாரத்தை ஆஸ்திரேலியா கடுமையாகப் பார்ப்பதாக அவர் சொன்னார். இந்தோனேசியாவின் கொள்கைகளை அவமதிக்கும் வகையிலான குறிப்புகள், அவுஸ்ரேலிய சிறப்புப் படைகளுக்கான தளத்தில், பயிற்சி ஆவணங்களில் இருந்ததாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, அவுஸ்ரேலியாவுடனான அனைத்து ராணுவ ஒத்துழைப்பையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
Read More »அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட்
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யூனிஸ்கான் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா 538 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (58 ரன்), யூனிஸ்கான் ...
Read More »அவுஸ்ரேலியாவில் உல்லாச விடுதி ஒன்றில் இளம்பெண் ஒருவர் பலி!
அவுஸ்ரேலியாவில் உல்லாச விடுதி ஒன்றில் பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். பிரித்தானியவை சேர்ந்த Stacey Tierney என்ற 29 வயது இளம்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள strip clubல் நடன அழகியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ம் திகதி காலை Stacey அந்த உல்லாச விடுதியில் பிணமாக கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை Staceyன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ...
Read More »இழுப்பறைக்கு கீழ் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரனை காப்பாற்றிய 2 வயது சிறுவன்
அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இரட்டையர் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்தபோது இழுப்பறை மீது ஏறியுள்ளனர். அப்போது இழுப்பறை திடீரென சாய்ந்தது. இதில் இரட்டையர்களில் ஒருவர் இழுப்பறைக் கீழ் சிக்கி வலியால் கதறியுள்ளார். இதனை கண்ட மற்றொரு சகோதரன் அவனை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளான். பல வழிகளில் தீர்வு காண முயன்று தோல்வி அடைந்ததால், வெறும் கைகளால் இழுப்பறையை தூக்க முயற்சி செய்துள்ளான். பின்னர் அதுவும் முடியாத காரணத்தினால் இழுப்பறையை பலம் கொண்டு முன்னே தள்ளியுள்ளான். இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட கீழே ...
Read More »நாவற்குழி சிங்களவரிற்கும் பொருத்துவீடுகள்?
யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் மீள்குடியேற்ற அமைச்சின் வீடுகள் கிட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 340 வரையிலான சிங்கள குடியேற்றவாசிகள் மஹிந்த ஆட்சி காலத்தில் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு வீடமைப்பு அதிகாரசபையின் அனுசரணையுடன் நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டனர். பின்னராக சிங்கள மதவாத அமைப்புக்களினால் படிப்படியாக நிரந்தர கல்வீடுகள் அமைத்து வழங்கப்பட்டதுடன் பாரிய விகாரையும் அமைத்து குடியேற்றதிட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட அதிரடிப்படை மற்றும் படையினர் உடைய இரு முகாம்கள் அப்பகுதியினுள் அமைக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பும் வழங்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் நிரந்தர வீடுகள் கிட்டியிராத ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			