இந்தோனேசியாவின் ஆகச் சிறந்த இராணுவ வீரர்களைச் சேர்த்துக்கொள்ள,அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துவருவதாகக் வெளிவந்த குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அவுஸ்ரேலியா வுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் தருவாயில் இருப்பதாக, அவுஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் Marise Payne கூறினார்.
அந்த விவகாரத்தை ஆஸ்திரேலியா கடுமையாகப் பார்ப்பதாக அவர் சொன்னார்.
இந்தோனேசியாவின் கொள்கைகளை அவமதிக்கும் வகையிலான குறிப்புகள், அவுஸ்ரேலிய சிறப்புப் படைகளுக்கான தளத்தில், பயிற்சி ஆவணங்களில் இருந்ததாக தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, அவுஸ்ரேலியாவுடனான அனைத்து ராணுவ ஒத்துழைப்பையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal