செய்திமுரசு

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக ...

Read More »

மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல்!

மாகாணசபை தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உறுதியான அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும். நிலையான ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்துவதே தற்போதைய தேவையாகவும் காணப்படுகின்றது. எனவே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் நிச்சியமாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கலந்துரையாடல்களும் அரசாங்கத்தரப்பில் இடம்பெற்று வருகின்றன. இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ...

Read More »

19 ஆவது திருத்தம் தொடர்பில் ரணில் கூறுவது பொய்!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாகவே முக்கிய ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பேணப்படுகின்றது என சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது ஒரு அரசியல் பிரச்சாரமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் இன்று  கேள்விக் குறியாக்கப்படுவதற்கு பிரதான காரணம் சபாநாயகரின் பொறுப்பற்ற  தன்மையும், ஒரு தலைபட்சமான  செயற்பாடுகளுமே. கடந்த காலங்களில் நாடாளுமன்றம் தொடர்பிலான விசாரணைகளை  புலனாய்வு  பிரிவினரும், காவல் துறை தரப்பினரும் மேற்கொள்ளவில்லை. நெருக்கடியான காலக்கட்டங்களிலும்    நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள்  பாதுகாக்கப்பட்டது. அரசாங்கம் இன்று நாட்டு ...

Read More »

பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம்!

பயங்கரவாத முகாம்களை அழித்ததையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால், இந்திய விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் ...

Read More »

அவுஸ்திரேலிய அழகி போட்டியில் தமிழ் பெண்!

அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் தமிழ் பெண் ஒருவர் அழகிப்போட்டியில் தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கியுள்ளார். பெனிட்டா சக்தி என்ற பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார். தமிழகத்தின் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பெனிட்டா, கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அங்கிருக்கும் தனியார் வங்கியில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அழகிப்போட்டியில் தேசிய அளவில் தெரிவாகியிருப்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளர். அந்த போட்டிக்காக முழு ஈடுபாட்டுடன் பெனிட்டா தன்னை தயார்படுத்தி வருகிறார். “என் கணவர் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் இந்த ...

Read More »

மறப்போம் மன்னிப்போம் கோரிக்கையும் யதார்த்தமும்!

மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதாக அது அமைய வேண்டும். மனம் திருந்தாமல் மன்னிப்பு கோருவதை மனக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் ஏற்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. வடபகுதிக்கு அரச முறையாகப் பயணம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம். இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். உண்மையான மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்ட அழைப்பாக இதனைக் கருத முடியவில்லை. ஏனெனில் மறந்து, மன்னிக்க வேண்டிய விடயங்களில் அல்லது சம்பவங்களில் என்ன நடந்தது, யார் யாரெல்லாம் பங்கேற்றிருந்தார்கள் ...

Read More »

கிளி. வெள்ளை வேட்டியின் கறுப்பு சட்டைக்காரர்கள் போராட்டத்தை குழப்ப முயன்றனர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்க அனுமதிக்கவில்லை குறித்த போராட்டம் ஆரம்பமாக முன்னர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சமூகம் தந்து, போராட்டத்திற்கு வருகை தந்த ஈ.பி.ஆர்.எல்.எப், கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 6 பேரை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் 2017ஆம் ஆண்டில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதிய ஓட்டுநருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈராண்டுகளுக்கு முன்னர் மெல்பர்னில் தாக்குதலை நடத்திய 29 வயது ஜேம்ஸ் கார்கசுலாஸ் (James Gargasoulas) எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 46 ஆண்டுகளுக்கு மறுக்கப்பட்டது. தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தை ஒன்றும் 10 வயதுச் சிறுமியும் அடங்குவர். அவுஸ்திரேலிய வரலாற்றில் ஒரேநேரத்தில் பலர் கொல்லப்பட்ட ஆக மோசமான சம்பவங்களில் ஒன்று இதுவென்று அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

Read More »

மன்னிப்பதற்கான உரிமை!

1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும் பங்குபற்றினார்கள். அதில் ஓர் ஊடகவியலாளர் இந்தியா பலவந்தமாக வானத்திலிருந்து உணவுப்பொதிகள் போட்டதைப்பற்றி ஜெயவர்த்தனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஜெயவர்த்தனா பின்வருமாறு பதிலளித்தார். ‘நான் அதை மன்னிப்பேன் ஆனால் அதை மறக்க மாட்டேன் என்று’ இது வழமைபோல ஜே.ஆரின் தந்திரமான ஒரு பதில். ஒன்றை மெய்யாக மன்னித்துவிட்டால் அதை மறந்துவிட வேண்டும். மன்னித்த பின்னும் மறக்கவில்லையென்றால் அங்கே பழிவாங்கும் உணர்ச்சி அல்லது ...

Read More »

‘தாமரை மொட்டு’ ராஜபக்சவின் குடும்ப கட்சி!

‘தாமரை மொட்டு’ பொதுமக்கள் கட்சி அன்றி அது ராஜபக்ச குடும்ப கட்சியாகும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். என தொழில் மற்றும் தொழிற்துறைத் தொடர்புகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார். பல்லேகலையில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- இன்று ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். கோத்தபாய ராஜபக்ச ...

Read More »