அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாகவே முக்கிய ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பேணப்படுகின்றது என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது ஒரு அரசியல் பிரச்சாரமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் இன்று கேள்விக் குறியாக்கப்படுவதற்கு பிரதான காரணம் சபாநாயகரின் பொறுப்பற்ற தன்மையும், ஒரு தலைபட்சமான செயற்பாடுகளுமே.
கடந்த காலங்களில் நாடாளுமன்றம் தொடர்பிலான விசாரணைகளை புலனாய்வு பிரிவினரும், காவல் துறை தரப்பினரும் மேற்கொள்ளவில்லை. நெருக்கடியான காலக்கட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் பாதுகாக்கப்பட்டது.
அரசாங்கம் இன்று நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை மாத்திரமே வழங்கி வருகின்றது. தேசிய மட்டத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal