நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ , 19 அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை எனவும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: மீள்குடியேற்றத்தில் நிராகரிக்கப்படும் அகதிகள்
மனுஸ்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள், கடந்த 2016ல் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். சமீபத்தில், இப்படி விண்ணப்பித்த 72 சதவீதமான அகதிகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. தற்போது விண்ணப்பித்த 32 அகதிகளில் 9 பேர் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த 9 பேரில் 4 ரோஹிங்கியா, 3 ஆப்கானியர், 2 பாகிஸ்தானியர் மற்றும் 1 ஈழத்தமிழர் எனக்கூறப்படுகின்றது. இதுவரை நவுரு முகாமிலிருந்து 300 அகதிகளும் மனுஸ்தீவிலிருந்து 167 அகதிகளும் என 467 ...
Read More »பொறுமையாக இருங்கள்!-மஹிந்த தேசப்பிரிய
மாகாண சபையை எதிர்பார்த்திருந்த எமக்கு நாடாளுமன்ற தேர்தலே கிடைத்துள்ளது. அதற்காக தேர்தலை நடத்தமால் விட இயலாது. எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் பிகாரமே நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.மேலும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 கோடி வரை தேவைப்படும் . எதுவாக இருந்தாலும் பொறுமையாக தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பொது தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ...
Read More »‘சென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில் படுத்து தூங்கினேன்’! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
என் இளமைக் காலத்தில் சென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில்தான் படுத்துத் தூங்கினேன் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த சுந்தர் பிச்சை காரக்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பையும், அதன்பின் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப் பட்டம் பயின்றார். அதன்பின் பென்சில்வேனியா வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டத்தையும் சுந்தர் பிச்சை பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ...
Read More »அரசியல் போர்க்களம்! – பி.மாணிக்கவாசகம்
நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், ...
Read More »தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvSA ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி ...
Read More »அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால் சுடப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதற்கு முன்னர் வாயு போத்தல்கள் நிரம்பிய தனது காரை வெடிக்க வைத்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை குறிப்பிட்ட நபர் காவல்துறையினர் ...
Read More »டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்!
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோர் பற்றி டிரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினார். நாடு கடந்து அகதிகள் வருவது படையெடுக்க அல்ல என்று அவர் கூறினார். அதைக் ...
Read More »சிறிலங்கா காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்!
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த காவல் துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் 43ஆவது சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்கர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியான 2096 / 17இல் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கி(CBSL) உட்பட அரச வங்கிகள் மீண்டும் நிதி மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read More »அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கத்திக்குத்து தாக்குதல்!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் நபர் ஒருவர் சற்று முன்னர் பலரை கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். காவல்துறையினர் சிறிய எண்ணிக்கையானவர்கள் கத்திக்குத்திற்குஇலக்காகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின் போர்க் வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்வான்ஸ்டன் வீதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நபர் ஒருவரை கைதுசெய்து காவல்துறை பாதுகாப்புடன் வைத்தியாசாலையில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal