அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது. மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு ...
Read More »செய்திமுரசு
அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா!
அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் ...
Read More »விடை தேட வேண்டிய வேளை!
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை (தேர்தல் விஞ்ஞாபனம்) தயாரிப்பதற்கு அவசியமான தேர்தல் முன்கள நிலைமை இன்னும் கனியவில்லை. ஆனால் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர்களும், வேட்பாளர்களாவதற்குத் தயாராகி வருபவர்களும் தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாக்குறுதிகளில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது குறித்து தெளிவான உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. அதுகுறித்து அவர்கள் தமது அதிகாரபூர்வமான தேர்தல் உறுதிமொழிகள் தொடர்பான அறிக்கையில் தெளிவாகக் கூறுவதற்காகக் காத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. வேட்பாளராக முதலாவது அறிவிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த கோத்தபாய ராஜபக் ...
Read More »காட்டிற்காக எங்கள் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்!
எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என பிரேசிலி;ன் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை தீட்டியவாறு அம்பு மற்றும் ஏனைய ஆயுதங்களுடன் காடுகளை அழிப்பவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரேசிலின் அமேசன் மழைக்காடுகள் அமோஜோனஸ் மாவட்டமாநிலத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முரா பழங்குடியினத்தவர்கள் வாழ்கின்றனர். முரா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுள்ள பாரிய காடழிப்புகளை ...
Read More »ஐ. நா.வில் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச தீர்மானம்!
ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செம்படம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொது சபை நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக் கூட்டத்தில் பங்கேற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக கலந்துரைாயட உள்ளார் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
Read More »ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்!
020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர். இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுகின்றன. இதன் பின்புலத்தில், சில விடயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. சில கேள்விகளையும் கேட்ட ...
Read More »தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா ?
சிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்கிணேஷ்வரன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
Read More »நீருக்கடியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பொதியில் 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. பின்னர் குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
Read More »‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய மாணவர்கள்
கார்பன் மாசுவை குறைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர்கள் ‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வருகின்றனர். கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் சூரிய மின்சக்தி(சோலார்) மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோவை வடிவமைத்து இருக்கின்றனர். இந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 பயணிகள் அமரலாம். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும், இந்த எலெக்ட்ரிக், ஆட்டோவை ஒரு முறை ‘சார்ஜ்’ செய்தால், 300 கி.மீ வரை பயணிக்கும். ஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கி.மீ இந்த ...
Read More »ஷரியா பல்கலைக்கழகத்தை பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும்!
மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் தொடர்ந்தும் அதேபோன்று இயங்குவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அதனை கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என தெரிவித்தார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்காக பெருமளவான நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக அது தொடர்ந்தும் இவ்வாறு இயங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் அப்பல்கலைக்கழகம் கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும். அங்கு ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			