அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நபர் ஒருவரின் இறுதிசடங்குகளை போதகர் ஒருவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்தி நடத்தியுள்ளார். கனெக்டிகட்டை சேர்ந்த பில்பைக் என்பவரின் இறுதிசடங்குகளையே போதகர் கையடக்க தொலைபேசி மூலம் நடத்தியுள்ளார். நோர்வோக் மருத்துவமனையின் தாதியொருவரின் ; உதவியுடன் இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட தாதி போதகரை ஏற்பாடு செய்த பின்னர் தொலைபேசி மூலம் தனிமைப்படுத்தலில் உள்ள பில்பைக்கின் குடும்பத்தினரை தொடர்புகொண்டுள்ளார். பின்னர் போதகர் இறுதி சடங்குகளை மேற்கொண்டவேளை கைத்தொலைபேசியை தாதி பில்பைக்கின் காதில் வைத்துள்ளார். தனது வாழ்க்கையின் மிகவும் அழகான பிரார்த்தனை வரிகள் ...
Read More »செய்திமுரசு
அறிகுறியின்றி தொடரும் கொவிட் – 19 சவால்கள்!
புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் – 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல் குறித்து உலகம் தினமும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலின் விளைவாக சீனா ஆழமான சமூக சுகாதாரம் தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. அங்கு 130,000 க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கின்ற அதேவேளை 4600 க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், அதிவிசேடமான பொதுச்சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்தியதன் மூலமாக நிலைவரத்தை இப்போது சமநிலைப்படுத்தியிருப்பதாக சீனா இப்போது ...
Read More »சுமந்திரன் வலியுறுத்தியது என்ன?
வடமாகாணம் உள்ளிட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களிற்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு எவ்வளவு காலம் தொடரும் என்று வரையறுத்துக் கூறப்படாமையானது ஆபத்தானது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களிற்கும் எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணிவரையில் ஊரடங்கு அமுலில் இருப்பதுதோடு பின்னர் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ...
Read More »”ஒரு மாதத்திற்குள் கொரோனா நபரொருவரிலிருந்து 403 பேருக்கு பரவும்” -விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய
கொரோனா வைரஸானது ஒரு மாதத்திற்குள் நபரொருவரிலிருந்து சுமார் 403 பேருக்கு மிக வேகமாக பரவக் கூடியளவு ஆபத்தானது எனத் தெரிவித்த விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய. இதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்டவற்றுக்காகவே தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு ...
Read More »போலித் தகவல்களை பரப்புவோரை கட்டுப்படுத்த புலனாய்வுப்பிரிவு நடவடிக்கை!
சமூக வலைத்தளங்கள் ஊடாக போலித் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டப்படுத்தவதற்காக புலனாய்வுப்பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அபாயமிக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 22மில்லியன் இலங்கையர்களையும் பாதுகாப்பதற்காக முப்படையினரும், காவல் துறையினரும் , அனைத்துப்பிரிவு புலனாய்வுத்துறையினரும் நேரம் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டு மூன்று தசாப்த போரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கைவாழ் பொதுமக்கள் எவ்வாறு ஒத்துழைப்புக்களை நல்கினார்களோ அதேபோன்று கொரோனா வைரஸையும் நாட்டிலிருந்து ...
Read More »யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகர் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் இந்து மதத்தவரான தாவடிப் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் சிவானந்தன் என்ற கட்டட ஒப்பந்தகாரர் என்றும் தெரியவந்துள்ளது. கட்டட ஒப்பந்தம் தொடர்பிலே குறித்த போதகரைத் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் என்று தெரிவித்து அவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. எனவே இந் நபருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
Read More »யாழ்ப்பாணம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு!
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குறித்த மாவட்டங்களில் 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும். இம் மாட்டங்களிலுள்ள மக்களுக்கு வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸர்லாந்திலிருந்து நாட்டுக்கு வந்த கொரோனா தொற்றுக்குள்ளான ...
Read More »தமிழ்த்தேசியபற்றாளர் சிங்கராசா – இறுதிவணக்க நிகழ்வு
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்த்தேசியபற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: எமது தாயக மக்களுக்கான தேசிய விடுதலைக்காக தொடர்ந்தும், பல்வேறு வழிகளில் இணைந்து செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மறைவு எம்மனைவரையும் கலங்கச் செய்கின்றது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்து வந்த பாலசிங்கம் சிங்கராசா ...
Read More »கரோனா லாக்-டவுன்; காற்றின் தரம் உயர்ந்தது!
கரோனா பாதிப்பு காரணமாக வெறிச்சோடிய சாலை மற்றும் மூடப்பட்ட தொழிற்சாலைகளால் பல்வேறு நாடுகளில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா, கடந்த மாதம் வூஹானில் நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவு குறைந்துள்ளதாகப் புகைப்படங்களை வெளியிட்டது. சீனா நகரமான வூஹானில்தான் கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து தொற்று பரவலானதால் நகரமே லாக்-டவுன் செய்யப்பட்டது. தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், சாலைப் போக்குவரத்து, தொழில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ...
Read More »கோவிட்-19-க்கு எதிரான வாக்சைன் எப்போது தயாராகும்?
உலகம் முழுதும் கரோனா என்ற வைரஸ் பரவி சுமார் 11,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்துதான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வாக்சைன் தயாரிப்பில் சில சோதனைக்கூடங்கள் ஈடுபட்டுள்ளன. இதுவரை நடந்தது என்ன? சீன ஆராய்ச்சியாளர்கள் நாவல் கரோனா வைரஸ் மரபணு வரிசையை அமெரிக்காவுக்கு அனுப்பிய 100 நாட்களுக்குப் பிறகு முதற்கட்ட மருத்துவ சோதனை 18 வயது முதல் 55 வயதினையுடைய 45 ஆரோக்கியமான நபர்களுக்கு அமெரிக்காவின் சியாட்டிலில் நடத்தப்பட்டது. இதுதவிர வேறுபட்ட வாக்சைன் அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் சோதனை ...
Read More »