மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குறித்த மாவட்டங்களில் 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும். இம் மாட்டங்களிலுள்ள மக்களுக்கு வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸர்லாந்திலிருந்து நாட்டுக்கு வந்த கொரோனா தொற்றுக்குள்ளான மதபோதகர் ஒருவர் மத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்
குறித்த நபரும் அவருடன் குறித்த தினங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்த நபர்களும் இணங்காணப்படும் வரை இந்த தடை நடைமுறையிலிருக்கும்
இந்த 5 மாவட்டங்களிலிருக்கும் மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வடக்கு மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.
Eelamurasu Australia Online News Portal