யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகர் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் இந்து மதத்தவரான தாவடிப் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் சிவானந்தன் என்ற கட்டட ஒப்பந்தகாரர் என்றும் தெரியவந்துள்ளது.
கட்டட ஒப்பந்தம் தொடர்பிலே குறித்த போதகரைத் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் என்று தெரிவித்து அவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. எனவே இந் நபருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal