கொரோனாவினால் மரணம்- தொலைபேசி மூலம் இறுதி சடங்குகள்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நபர் ஒருவரின் இறுதிசடங்குகளை போதகர் ஒருவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்தி நடத்தியுள்ளார்.

கனெக்டிகட்டை சேர்ந்த பில்பைக் என்பவரின் இறுதிசடங்குகளையே போதகர் கையடக்க தொலைபேசி மூலம் நடத்தியுள்ளார்.

நோர்வோக் மருத்துவமனையின் தாதியொருவரின் ; உதவியுடன் இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட தாதி போதகரை ஏற்பாடு செய்த பின்னர் தொலைபேசி மூலம் தனிமைப்படுத்தலில் உள்ள பில்பைக்கின் குடும்பத்தினரை தொடர்புகொண்டுள்ளார்.

பின்னர் போதகர் இறுதி சடங்குகளை மேற்கொண்டவேளை கைத்தொலைபேசியை தாதி பில்பைக்கின் காதில் வைத்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகவும் அழகான பிரார்த்தனை வரிகள் அவை என தெரிவித்துள்ள போதகர் தான் அவரை நேசிப்பதாக தெரிவித்தாகவும் இதன் பின்னர் தொலைபேசி மூலம் குடும்பத்தினர் பில்பைக்கிற்கு இறுதி வார்த்தைகளை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பில்பைக்கின் பிள்ளைகள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.