முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறாதென அரசதலைவர் தெரிவித்துள்ள நிலையிலும், இந்தப் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. தெற்கின் பல பிரதேசங்கள் மகாவலி கங்கையின் நீரால் செழிப்புடன் காணப்படுகின்றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்பதால் மூன்றுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் விவசாயிகள் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற னர். அநுராதபுர மாவட்டத்தின் வறட்சியான பகுதிகள் பச்சைப் பசேலெனக் காணப்படுவதற்கு மகாவலி நீரே ...
Read More »செய்திமுரசு
தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் 7 ஆம் திகதி முற்றாக முடங்கும்!
மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி பூரண கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான பசுமை நிறைந்த புல்லுமலை கிராமம் நூறு வீதம் விவசாயமும் கால்நடையும் கொண்ட பசும் சோலை கிராமமாகும். இக் கிராமங்களை அண்டி கித்துள், உறுகாமம், தம்பட்டி, வெலிக்காகண்டி என பல கிராமங்கள் உள்ளன. புல்லுமலையுடன் இணைந்த மெருவட்டை சிறு குளமும் ...
Read More »தமிழ்மக்களின் கேள்விக்கு என்னிடம் 4 தெரிவுகள்! -விக்னேஸ்வரன்
வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா என தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள். இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன்” என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் நிரந்தர அலுவலகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடச் சந்திக்கு அண்மையாக இன்று (31) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. அதனைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் இணைத் ...
Read More »உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறுவோம் – டிரம்ப்
உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றி கொள்ளாவிட்டால் வெளியேறுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். உலக நாடுகள் இடையேயான வர்த்தக சட்டதிட்டங்களை வகுக்கவும், பல்வேறு நாடுகள் இடையே ஏற்படுகிற வர்த்தக பிரச்சினைகளை தீர்க்கவும் டபிள்யு.டி.ஓ. என்னும் உலக வர்த்தக அமைப்பு. 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த அமைப்பானது, அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் புகார் எழுப்பி வருகிறார். இந்த நிலையில் அவர் ‘புளூம்பெர்க் நியூஸ்’ ஊடகத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது ...
Read More »அவுஸ்திரேலிய பிரதமர்,வெளிவிவகார அமைச்சரை இலக்கு வைத்த சிறிலங்கா பிரஜை!
அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா முஸ்லீம் பிரஜை மல்கம் டேர்ன்புல் யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முகமட் கமர் நிஜாம்டீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த அதிர்ச்சிதரும் விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் மல்கம் டேர்ன்புல் மற்றும் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகரை இந்த நபர் இலக்குவைத்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதேவேளை சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்றம் அவரிற்கு பிணை ...
Read More »பனைமரக்காடு திரைப்படம் அவுஸ்திரேலியாவில் வெளியீடு! – UPDATED 3
ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை ...
Read More »சிட்னியில் பல இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்த சிறிலங்கா பிரஜை!
அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் செயற்பட்டதாக குற்றம்சாட்டி சிறிலங்காவை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கைதுசெய்யப்பட்டுள்ளவர் சிட்னயின் பல முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்திருந்தார் என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் வருகை தந்து நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த முகமட் கமர் நிஜாம்டீன் என்பவரையே நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சிட்னியின் தென்கிழக்கில் உள்ள கென்சிங்டனில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறிலங்காவைச் சேர்ந்த நபர் பல்கலைகழக வளாகத்திலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என ...
Read More »ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்!
ஒகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக ஈழத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இந்த நாள் உலக சமூகத்தால் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியே எஞ்சுகிறது. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பல நூறு நாட்கள் எமது மக்கள் தெருவில் கிடந்து போராடினார்கள். இன்றும் கண்ணீரோடும் கம்பலையோடு்ம் அவர்கள் வாழ்கின்றனர். மனிதாபிமானம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசும் இந்த உலகின் மத்தியில்தான் எங்கள் சனங்கள் போராடுகின்றனர். உலகின் பல ...
Read More »தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை: டிரம்ப்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை மீண்டும் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் டுவிட்டரில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மேற்கொள்ளும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை ...
Read More »எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை!
பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்கின்றது என வடமாகாண மகளீர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அடுத்த மாதம் ஜ.நா மன்றத்தில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. போர் முடிந்தும் ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான எந்த ஒரு வினைத்திறனான ...
Read More »
Eelamurasu Australia Online News Portal