அவுஸ்திரேலிய பிரதமர்,வெளிவிவகார அமைச்சரை இலக்கு வைத்த சிறிலங்கா பிரஜை!

அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா முஸ்லீம் பிரஜை மல்கம் டேர்ன்புல் யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முகமட் கமர் நிஜாம்டீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த அதிர்ச்சிதரும் விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் மல்கம் டேர்ன்புல் மற்றும் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகரை இந்த நபர் இலக்குவைத்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இதேவேளை சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை நீதிமன்றம் அவரிற்கு பிணை வழங்க மறுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் வருகை தந்து நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த முகமட் கமர் நிஜாம்டீன் என்பவரையே நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

சிட்னியின் தென்கிழக்கில் உள்ள கென்சிங்டனில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவைச் சேர்ந்த நபர் பல்கலைகழக வளாகத்திலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் பல இலத்திரனியல் உபகரணங்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளனர்.

சிறிலங்கா பிரஜையிடமிருந்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களையும் இலக்கு வைக்க கூடிய பல இடங்கள் மற்றும் நபர்களின் விபரங்கள் அடங்கிய குறிப்பேட்டையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கை வைத்துப்பார்க்கும்போது அவருக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.