பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஃபேர்கஸ் ஒளல்ட் மற்றும் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் ஆகியோர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேற்று (24) காலை நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்துள்ளனர். இதன் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய ...
Read More »செய்திமுரசு
சம்பந்தனை சந்தித்த அவுஸ்திரேலிய, ஜப்பான் தூதுவர்கள்!
சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் மற்றும் தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள அவுஸ்திரேலிய தூதுவர் ஆகியோர் நேற்று(24) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர் சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியமா மற்றும் அவுஸ்திரேலிய தூதுவராக கடமையாற்றி தனது சேவை காலத்தை நிறைவு செய்யவுள்ள பிரைஸ் ஹட்ச்ஸ்ன் ஆகிய இருவருமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்
Read More »ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் தாமதிப்பது முறையல்ல!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், விடுதலையை ஆளுநர் தாமதிப்பது முறையல்ல என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 138 நாட்கள் ஆகியும், அவர்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை. 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுப்பதில் எந்தக் காரணமும் இல்லாமல் ஆளுநர் ...
Read More »திட்டமிடப்பட்ட நில அபகரிப்பு!
திருகோணமலை, கோணேசபுரி வனப் பகுதியை, வனப் பாதுகாப்புத் திணைக்களம், திட்டமிட்டு அபகரிப்பதாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உப்புவெளிப் பிரதேச சபை உறுப்பினர் ச.விவுசன் குற்றஞ்சாட்டினார். திருகோணமலை, சாம்பல் தீவு 06ஆம் வட்டாரப் பகுதி, ஆத்திமோட்டை, கோணேசபுரி, சாம்பல்தீவு குடியிருப்புப் பிரதேசங்களின் நடுவில் காணப்படுகின்றது. இதனுள் இரு கிராமங்களை இணைக்கும் வீதிகள், குடியிருப்புக் காணிகள், வயல் நிலங்கள், தோட்டக் காணிகள் காணப்படுவதாகவும் இவற்றையே, வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அடையாளக்கல் இட்டு, முற்றுகையிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்களின் நிலங்களும், பொது இடங்களும் பரவலாக ...
Read More »மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் ரணில் !
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வில் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார். தனது மகனின் திருமணத்திற்கு வருகைத் தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே பிரதமர் இன்று திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். ரோஹித ராஜபக்ஷ அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ ஆகியோர் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட அசாதாரண நிலை!
அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ பற்றியுள்ளது. இதனால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் அசாதாரண நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மேனியா வனப்பகுதியில் உள்ள புதர் காடுகளில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் வேகமாக நெருப்பு பரவியதால் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த காட்டுத் தீயை அணைப்பதற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீயின் வேகம் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் 720 கிலோ மீட்டர் தூரம் தீ பரவலாம் ...
Read More »வெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்!
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ...
Read More »யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு!
விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன. குறித்த வெடிகுண்டுகள் பல வருடங்கள் ...
Read More »இளம் பிக்குவை கடுமையாக தாக்கிய சிரேஷ்ட பிக்கு!
இளம் பிக்கு ஒருவர், சிரேஷ்ட பிக்கு ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், காலி அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் பதிவாகியுள்ளதோடு பிரதேச மக்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் உள்ள சிரேஷ்ட பிக்கு ஒருவர் அங்கிருந்த இளம் பிக்கு ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அறிந்த பிரதேச மக்கள் உடனடியாக 119 என்ற காவல் துறையினரின் அவசர தொலைபேசி பிரிவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சிறுவனான ...
Read More »வடிவேலின் புதிய அரசியல் யாப்பு ?
கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதே போன்று கூட்டமைப்பிற்கு எதிர்நிலைப்பாடுள்ள பிறிதொரு தமிழ் கட்சியின் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் ஆசுவாசமாக மாலை நேரங்களில் பேசிக் கொள்வதுண்டாம். பொதுவாக மக்களுக்கு முன்னால் முரண்பாடுள்ளவர்களாக காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், தனியறையில் மதுக் கோப்பைகளுடன் இருப்பது அரசியலை பொறுத்தவரையில் சர்வசாதாரணமான ஒன்று. சம்பந்தனும் அப்படியான மதுக் கோப்பைகள் உரசிக் கொள்ளும் இரவுகளை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal