இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ...
Read More »செய்திமுரசு
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படுமென சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என குறித்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ...
Read More »பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்!
பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியாவுக்கு செல்ல உள்ளார் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது. பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது. தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை ...
Read More »36 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கையை சேர்ந்த 36 பேருக்கு அவுஸ்திரேலியாவில் கல்விசார் புலமைப்பரிசில்கள் கிடைத்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகத்தின் பொருளாதார அபிவிருத்தி, பால்நிலை சமத்துவம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்ட பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் புறூஸ் நெவேசரின் தலைமையில் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. 2020ஆம் ஆண்டுக்கான இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் தொடர்பான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் ...
Read More »வங்கதேசத்தின் எதேச்சாதிகாரி ஆகிறாரா ஷேக் ஹசீனா?
மக்கள்தொகையில் உலகின் எட்டாவது பெரிய நாடான வங்கதேசம், மிகக் குறைந்த வளர்ச்சிபெற்ற நாடுகளின் பட்டியலிலிருந்து நீங்கிவிட்டது. ‘நடுத்தர வருவாயுள்ள நாடு’ என்ற நிலைக்கு உயர்கிறது. அடித்தளக் கட்டமைப்புகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் உலகின் முன்னணி நாடாகிவிட்டது. இவ்வளவும் 2009-ல் பதவிக்கு வந்தது முதல் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசின் சாதனைகள். மியான்மரிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குப் புகலிடம் கொடுத்ததற்காக உலகம் அவரைப் பாராட்டுகிறது. மதத் தீவிரவாதம் பரவாமல் தடுப்பதற்காக மேற்குலகு பாராட்டுகிறது. வட கிழக்கில் தீவிரவாதிகளின் முகாம்களை ...
Read More »585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை!
பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் வரைவு உடன்படிக்கையை பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த வரைவு உடன்படிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. வெளியேற்றத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும் ...
Read More »சிறிலங்கா நாடாளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம்! ?
நாடாளுமன்ற அமர்வினை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆளும் தரப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர் தரப்பினரினும் ஊடகவியலாளர் சந்திப்பும் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை கூடை, தண்ணீர் போத்தல்கள்!
சிறிலங்கா நாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. உரையாற்ற ஆரம்பித்த வேளை சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் சபாமண்டபத்துக்கு நடுவில் வந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டதுடன் சிலர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொண்டனர். ...
Read More »நத்தையை உட்கொண்ட அவுஸ்திரேலியா நாட்டு வாலிபர் மரணம்!
மூல வியாதிக்காரர்கள் நத்தையை மருந்தாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். நத்தையை முறையாக சமைக்காது, இறைச்சியை உட்கொண்டால் மிகப்பெரிய ஆபத்தான நிலையை அடைவீர்கள் என்பதற்கு அவுஸ்திரேலியா நாட்டு வாலிபர் சிறந்த உதாரணம். ஒரு முறை நண்பர்கள் விட்ட சவாலுக்காக தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையை உட்கொண்ட சாம் பல்லார்டு என்பவர் பல்வேறுபட்ட பாதிப்புக்குள்ளாகி, 8 வருடங்களுக்குப் பின்னர் மரணமாகியுள்ளார். நத்தையை சாப்பிட்ட உடனேயே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பில் ஆரோக்கியம் அடைந்தவர், பின்னர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவரால் நீண்ட காலம் ...
Read More »‘ஆஸியில் ஸ்மித், வார்னர் இல்லாதது இந்திய அணியில் கோலி, ரோஹித் இல்லாதது போன்றது’!- சவுரவ் கங்குலி
ஆஸ்திரேலிய அணியில் டேவிட்ர் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாததற்கு சமம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இதில் பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் கிரிக்கெட் விளையாடத் தடையும், ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டுதடையும் விதிக்கப்பட்டது. இதில் வார்னர், ஸ்மித்துக்கு தடை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal