செய்திமுரசு

மஹிந்த – தயாசிறி – கோட்டா சந்திப்பு

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, மற்றும் அக்கட்சியின் பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

Read More »

ஜனாதிபதித் தேர்தல்; இலவு காத்த கிளியின் கதை

எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தல், இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மாயை, ஊடகங்களால் கட்டியெழுப்பபட்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறான ஆலவட்டங்கள் கட்டப்படுவதுண்டு. இறுதியில், எதிர்பார்ப்புகள் காற்றுப்போன பலூன் போலாவதும் பின்னர், அடுத்த தேர்தலில் நம்பிக்கை வைப்பதுமெனத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலும், அதற்கு விலக்கல்ல. இப்போது எல்லோரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆரவு ...

Read More »

டிரம்ப் மனைவி, வடகொரியா தலைவர் ரகசிய சந்திப்பா?

ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலானியாவும், வடகொரிய தலைவரும் இதுவரை தனியே சந்தித்ததில்லை” என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. பிரான்சில் நடைபெற்ற ‘ஜி-7’ மாநாட்டுக்கு இடையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா உடனான விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், “பல்வேறு வளம் மற்றும் திறன் கொண்ட நாட்டை கிம் ஜாங் அன் நிர்வகித்து வருகிறார். அவரை பற்றி எனக்கும், எனது மனைவிக்கும் நன்கு தெரியும்” என கூறினார். வடகொரிய தலைவர் குறித்து, மெலானியாவுக்கு நன்கு தெரியும் என டிரம்ப் பேசியது பரபரப்பை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மகளை கொன்ற தாய்!

அவுஸ்திரேலியாவில் மகளை, தாயே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழந்த சிறுமி குறித்து அவரின் தந்தை மனம் உருக பேசியுள்ளார். New South Wales-ஐ சேர்ந்தவர் நாதன் காடர்ன்ஸ். இவர் மனைவி தமரி குர்னே. தம்பதிக்கு லைலா (3) என்ற மகள் உள்ளார். நாதனுக்கும், குர்னேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். லைலா தாயுடன் இருந்த வந்த நிலையில் கடந்த யூலை 31ஆம் திகதி முதல் தந்தையுடன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தந்தையிடம் வந்த அடுத்தநாள் அதாவது ...

Read More »

அமேசன் காட்டுத் தீயை விடவும் அங்­கோ­லா­வில் பரவிய­ மும்­ம­டங்கு காட்டுத்தீ

அமேசன் பி­ராந்­தியத்தில் பரவிவரும் காட்டுத் தீ குறித்து சர்வதேச ரீதியில்  பெரிதும் விவா­திக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில்  உல­க­ளா­விய காட்டுத் தீக்கள் தொடர்பில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­யத்தால் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்ள உலக வரை­ப­ட­மா­னது அனைவரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­து­வ­தாக  உள்­ளது. ஏனெனில் அந்த வரைபடம்  அமேசன் பிராந்­தி­யத்தில் பரவிவரும் காட்டுத் தீயை விடவும் அதி­க­ள­வான காட்டுத் தீக்கள் மத்­திய அமெ­ரிக்­காவில் பரவி வரு­வதை தெளிவாக எடுத்துக் காட்­டு­கி­றது. அது கடந்த வாரம்  இரு நாட்கள் காலப் பகு­தியில் அங்­கோ­லாவில்  மட்டும்   பிரே­சிலில் ஏற்­பட்­டுள்ள காட் ...

Read More »

வெடிபொருட்கள் கண்டறிவதற்கான விசேட உபகரணம் கையளிப்பு!

ரஷ்ய விஞ்ஞானிரொருவரால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27.08.2019) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. சுமார் 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இந்த புதிய தொழிநுட்ப உபகரணம் கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ்வின் (Dr.Evgeny Usachev) தயாரிப்பாகும். கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ் இவ்வுபகரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததுடன், ரஷ்ய விஞ்ஞானி ஓல்கோ உசச்சேவா (Olgo Usacheva), இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி.மெட்டேரி (Yury B.Materiy), ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு ...

Read More »

மைத்திரி – மஹிந்த முக்கிய சந்திப்பு !

சிறிலங்கா   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு கூட்டணி அமைப்பது தொடர்பில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தல் தொடர்பான   பேச்சுவார்த்தை  நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இரு தரப்பு பேச்சுவாரத்தையில் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 30 ஆக மட்டுப்படுத்தல், தேர்தல் முறைமையில் மாற்றங்களை  கொண்டு வருதல் மற்றும் சிறந்த கொள்கைத்திட்டங்களை பகிரங்கப்படுத்தி அவற்றை  செயற்படுத்தல் உள்ளிட்ட மூன்று பிரதான ...

Read More »

மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும்!

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தவிர, தங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாதென்றும் தங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். அவர் நேற்று (27) ...

Read More »

தாக்கப்பட்ட ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது நேற்று திங்கட்கிழமை (26) மாலை சிறிடெலோ அரசியல் கட்சியின் இளை ஞரணி தலைவர் தாக்குதல் நடத்தியமையால் ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வவுனியாவில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வருடாந்த ஊடக சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு வருகை தந்த சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவரான பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக நிறு வன மொன்றின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஒலிவாங்கியை ஊடக சந்திப்பில் வைத்தது யார்? என ...

Read More »

சஜித் உட்­பட நால்­வரின் பெயர்கள் பரிந்துரை!

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரேமதா­சவின் பெய­ருடன் மேலும் நால்­வரின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இம்­மாத இறு­திக்குள் பல கேள்­வி­க­ளுக்கு விடை கிடைக்கும் எனவும் கட்­சியின்  தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசீம் தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு என்ன என்­பதை வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில், ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து அறி­விக்க இப்­போது  எந்த அவ­சி­யமும் இல்லை. இன்­னமும் ஜனா­தி­பதி தேர்தல் குறித்த ...

Read More »