மைத்திரி – மஹிந்த முக்கிய சந்திப்பு !

சிறிலங்கா   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு கூட்டணி அமைப்பது தொடர்பில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தல் தொடர்பான   பேச்சுவார்த்தை  நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது இரு தரப்பு பேச்சுவாரத்தையில் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 30 ஆக மட்டுப்படுத்தல், தேர்தல் முறைமையில் மாற்றங்களை  கொண்டு வருதல் மற்றும் சிறந்த கொள்கைத்திட்டங்களை பகிரங்கப்படுத்தி அவற்றை  செயற்படுத்தல் உள்ளிட்ட மூன்று பிரதான காரணிகள் பரிந்துரை செய்யப்பட்டன.

இந் நிலையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தல் தொடர்பான சந்திப்பு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள சிறிலங்கா   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.