அமேசன் பிராந்தியத்தில் பரவிவரும் காட்டுத் தீ குறித்து சர்வதேச ரீதியில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலகளாவிய காட்டுத் தீக்கள் தொடர்பில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள உலக வரைபடமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது.
ஏனெனில் அந்த வரைபடம் அமேசன் பிராந்தியத்தில் பரவிவரும் காட்டுத் தீயை விடவும் அதிகளவான காட்டுத் தீக்கள் மத்திய அமெரிக்காவில் பரவி வருவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அது கடந்த வாரம் இரு நாட்கள் காலப் பகுதியில் அங்கோலாவில் மட்டும் பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட் டுத் தீக்களை விடவும் 3 மடங்கு அதிகமான காட்டுத் தீக்கள் ஏற்பட்டு பரவி வருவதை வெளிப்படுத்துகிறது.
மேற்படி வரைபடத்தின் பிரகாரம் அங்கோலாவில் 6,902 காட்டுத் தீ சம்பவங்களும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 3,395 காட்டுத் தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆனால் பிரேசிலில் 2,127 காட்டுத் தீ சம்பவங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
பிரான்ஸில் இடம்பெற்ற ஜி–7 நாடுகளின் உச்சிமாநாட்டின் போது அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் அமேசன் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு 22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியுதவியை அளிக்க இணக்கப்பாட்டை எட்டியிருந்த நிலையில் ஆபிரிக்கப் பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீக்கள் குறித்து அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காதது சர்வதேச ரீதியில் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இது குறித்து டுவிட்டர் இணையத்தளத்தில் வெ ளியிட்ட செய்தியில், ஆபிரிக்க காட்டுத் தீ சம்பவங்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் நாசா தன்னால் வெளியிடப் பட்ட வரைபடத்தில் காட்டுத் தீ ஏற்பட் டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள பிராந்தி யங்கள் மழைக்காடுகளா அல்லது சாதா ரண புதர் காடுகளா என்பது குறித்து தகவல் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.