செய்திமுரசு

கீழடி என்பதே எங்கும் பேச்சு!

தேனீக்களின் இயல்பு தேனைச் சேகரிப்பதுதான். ஆனால், சேகரிக்கப்பட்ட தேனின் பயனாளிகள் தேனீக்கள் இல்லை என்றாலும், தொடர்ந்து தேனீக்கள் தேனைச் சேகரித்துக்கொண்டே இருக்கும். தொல்லியல் ஆய்வாளர்கள் தேனீக்களைப் போன்றவர்கள். கல்வெட்டு, சிற்பம், அகழாய்வு, சுவடியியல், நாணயவியல், அருங்காட்சியகவியல் போன்றவை தொல்லியல் எழுத்துலகத்தின் பிரிவுகள். வரலாற்று மன்றங்கள், தொல்லியல் கழகங்கள், மரபுநடைக் குழுக்கள் எனப் பல அமைப்புகள் ஓசையின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ எனும் நூலைத் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை தொல்லியல் ...

Read More »

அகதிகளை சிறை வைக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் அகதிகளை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பப்பு நியூ கினியாவில் உள்ள பொமனா சிறை வளாகத்தில் அமைந்துள்ள குடிவரவுத் தடுப்பு மையத்தில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தூக்கமின்மையால் சித்ரவதைப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நிதியுதவினால் கட்டப்பட்ட பொமனா சிறை வளாகத்தில் கட்டப்பட்ட குடிவரவுத் தடுப்பு மையத்தில், ஏழு ஆண்டுகளாக மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களில் 18 பேர் முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்து ...

Read More »

ரஜினிகாந்த் சிறிலங்கா வர எந்த தடையும் இல்லை!

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை  சிறிலங்கா  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் வருகை தர ரஜினி முடிவு செய்ததாகவும், ஆனால் அவருக்கு விசா வழங்க சிறிலங்கா அரசு மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அரசியல் நடவடிக்கைக்காக சிறிலங்கா  வரும் அவருக்கு விசா வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.  ஆனால் இதனை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். “நடிகர் ரஜினிகாந்த் சிறிலங்கா  வருவதில் எந்த தடையும் இல்லை. மேலும் அதுபற்றிய வதந்திகளில் ...

Read More »

2023 வரை GSP+ வரிச் சலுகை தொடரும்!

GSP+ வரிச் சலுகையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதன் கண்காணிப்பு செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மாலத்தீவு தூதுக்குழுவின் துணைத் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பார்ட் (Thorsten bargfarde) தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ...

Read More »

ரஜனி கோத்தாரி: இந்திய அரசியலின் குறுக்குவெட்டு ஆய்வாளர்

அரசியலோடு நெருங்கிப் பிணைந்தது பொருளியல். உலகளவில் பொருளியல் கொள்கைகளே அரசியலின் அடிப்படையாகவும் இருக்கின்றன. ஒருசில இனக்குழுக்களை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகளில் பொருளியல் வாதங்களே அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கலாம். ஆனால், பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அரசியலைத் தீர்மானிப்பதில் பொருளியலைக் காட்டிலும் சமூகவியலே முக்கியப் பங்காற்றுகிறது. அதை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தியவர் ரஜனி கோத்தாரி. அரசியல்-சமூகவியல் என்ற புதியதொரு ஆய்வுத் துறையைத் தொடங்கிவைத்தவர் அவரே. இந்திய அரசியலைப் பற்றிய விவாதங்களில் ரஜனி கோத்தாரி அளவுக்குத் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் வேறு ...

Read More »

பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட ஈழப் பெண்!

ஈழத்தை  பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷ் என்பவருக்கு  பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருது கிடைத்துள்ளது மேற்படி விருது, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தையொட்டி இசைத்துறையில் அதிக பங்களிப்பு செய்தமைக்காக கௌரவ விருதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து மாதங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விழாவிற்கு மாதங்கி தனது தாயாருடன் சென்று விருதை பெற்றுக்கொண்டுள்ளார். இக்கௌரவ விருதை இளவரசர் வில்லியம்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை(14.01.2020) மாதங்கிக்கு அணிவித்துள்ளார். இது குறித்து மாதங்கி கூறுகையில், சுமார் ; 30 வருட காலங்கள் தனது தாய், வாழ்வில் ...

Read More »

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்!

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் எனப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை கிண்ணியால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். நாம் ஆட்சிக்கு வந்து மறு நாளே மத்திய வங்கி கொள்ளையர் களையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையும் ; சிறையிலடைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லை. மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய நிவாரணங்களை ...

Read More »

மஹிந்தானந்தவின் கருத்துக்கு சிவஞானம் கண்டம்!

தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம் என்று கூறிய மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மஹிந்தானந்த அழுத்தமே தமிழர்களைச் சந்திப்பதற்காகக் கூறி யாசகரை சந்தித்துவிட்டா இவ்வாறான கருத்துக்களைக் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நாளை (ஜனவரி 19) நடைபெற உள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்  தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ...

Read More »

அறிவுக்காக வாழ்பவர்களை நான் நேசிக்கிறேன்!

புத்தகங்கள் என் கனவு என்பதைவிட விட புத்தகங்கள் உருவாக்கும் பிரம்மாண்டமான கனவுக்குள் நான் நடமாடுகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். பிறந்து வளரும் குடும்பச் சூழல், பாலின பேதங்கள் உருவாக்கும் தடைகள் அனைத்தையும் கடந்து செல்ல இந்தக் காகிதக் கதவுகளைத் திறந்தபோதுதான் வழி கிடைத்தது. என் வாழ்க்கையில் நான் முதலும் கடைசியுமாக செய்த திருட்டு மூன்றாம் வகுப்புப் படிக்கையில் பள்ளி நூலகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டுவந்ததுதான். அப்போது அது தவறு என்றுகூடத் தெரியாது. அது தெரியவந்து வகுப்பறையில் வைத்து ஆசிரியைக் கண்டித்தபோது இளம் மனதில் பெரும் ...

Read More »