ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷ் என்பவருக்கு பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருது கிடைத்துள்ளது
மேற்படி விருது, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தையொட்டி இசைத்துறையில் அதிக பங்களிப்பு செய்தமைக்காக கௌரவ விருதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து மாதங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்விழாவிற்கு மாதங்கி தனது தாயாருடன் சென்று விருதை பெற்றுக்கொண்டுள்ளார். இக்கௌரவ விருதை இளவரசர் வில்லியம்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை(14.01.2020) மாதங்கிக்கு அணிவித்துள்ளார்.
இது குறித்து மாதங்கி கூறுகையில், சுமார் ; 30 வருட காலங்கள் தனது தாய், வாழ்வில் பல மணிநேரங்களை செலவிட்டு மகாராணிக்காக ஆயிரம் பதக்கங்களை தைத்துள்ளார்.
மிகவும் குறைந்த சம்பளத்தில் எனது தாயினால் செய்யப்பட்ட தொழிலை நான் கௌரவப்படுத்தியுள்ளேன் என்றும் இத்தொழிலை தன் தாய் மிகவும் அர்ப்பணிப்புடனும் பெருமையுடனுமே செய்தார் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal

