கொரோனா வைரசால் நுரையீரல் பாதிப்பால் இங்கிலாந்தில் உள்ள தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து என்று நியூசிலாந்தில் சிக்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிதாபமாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் வசித்து வரும் நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தற்போது நியூசிலாந்தில் சிக்கியுள்ளார். விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் உள்ள மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறார். நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் ...
Read More »செய்திமுரசு
சமூக பொறுப்புடன் உதவ விக்னேஸ்வரன் அழைப்பு!
இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து இதுவரை நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன. இன்றும் சில சனசமூக நிலையங்கள் எம்மிடம் உதவி நாடி நின்றன. பொருள்களின் பற்றாக்குறை மற்றும் ...
Read More »கொரோனா வைரஸ் தாக்கம் : அவுஸ்திரேலியாவின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கம்
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, அவுஸ்திரேலியாவின் பெரும்பாளான பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தாலும் அந்த நாட்டின் சினிமா தியெட்டர்கள், விடுதிகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் என்பன மூடப்பட்டுள்ளதால் தமது குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே இரவில் 149 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலியாவின் இதுவரை ஆயிரத்து 886 ...
Read More »கொரோனா தீவிரமடைகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 35 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 554 பேர் ...
Read More »மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்!
கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அனைத்து நிவாரணங்களும் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும். இந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை தலைமை செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி, நிதி நிறுவன மற்றும் வரி நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் வருமாறு, 1. ...
Read More »ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரம் நீட்டிப்பு!
கொழும்பு, கம்பஹா, புத்தளம், வட மாகாணத்துக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த மாவட்டங்களில் இன்று பகல் 12 மணிவரை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More »அநியாயமோ, அறியாமையோ?
கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ். இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது. அறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் நாளாந்தம் நடைமுறைக்கு வருகின்றன. இவ்வாறானதொரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான நேரத்தில் யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியிலுள்ள குளிர்பான நிலையத்தில், கொரோனா ...
Read More »இலங்கையில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் பூரண சுகமடைந்தார்!
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது நபரான சுற்றுலா வழிகாட்டியை அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவ குழுவினர் புகைப்படம் எடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக உள்ளூரில் அடையாளம் காணப்பட்ட முதல் இலங்கையரான சுற்றுலா வழிகாட்டி பூரண சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ;இன்று முற்பகல் அவர் அவ்வாறு வீடு திரும்பியதாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் உயர் அதிகாரியொருவர் கேசரிக்கு உறுதிப்படுத்தினார். மத்தேகொடையைச் சேர்ந்த குறித்த சுற்றுலா வழிகாட்டி, இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா குழுவொன்றுக்கு வழி காட்டியாக செயற்பட்ட ...
Read More »முகத்தில் தும்மிவிடுவேன்…கொரோனாவை வைத்து மிரட்டிய இன்ஸ்டாகிராம் அழகி
இன்ஸ்டாகிராம் மொடலான அழகிய இளம்பெண் ஒருவரின் கொரோனா தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Karylle Banez என்ற அவுஸ்திரேலிய இன்ஸ்டாகிராம் மொடலும், ப்ளாக்கருமான ஒரு இளம்பெண், Leigh Street Wine Room என்ற உணவகத்துக்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் வெயிட்டரான ஒரு பெண் Karylleஐ மரியாதைக்குரிய விதத்தில் நடத்தவில்லையாம். தன்னைப் பார்த்து அவர் கண்களை உருட்டியதால் கோபமடைந்த Karylle, தனது இன்ஸ்டாகிராம் இடுகை ஒன்றில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த இடுகையில், எனக்கு மட்டும் கொரோனா இருந்தால், யார் மீது தும்மியிருப்பேன் தெரியுமா? இங்கிருக்கும் ...
Read More »பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் வைத்தியர் பலி !
பிரான்சில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அங்கு ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரான்சில் முதலாவது வைத்தியர் உயிரிழந்துள்ளார். தனது ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஒரு தொண்டராக தனது வைத்தியர் சேவையை தொடர்ந்து வந்த DR. JEAN JACGUES கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். Franceன் 59ம் பிராந்தியத்தின் LILLE வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் கடமையாற்றிய DR. JEAN JACGUES கொரானா தாக்கத்தினால் இன்று உயிரிழந்தார். கொரோனா வைரஸின் ...
Read More »