பிரான்சில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அங்கு ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரான்சில் முதலாவது வைத்தியர் உயிரிழந்துள்ளார்.
தனது ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஒரு தொண்டராக தனது வைத்தியர் சேவையை தொடர்ந்து வந்த DR. JEAN JACGUES கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
Franceன் 59ம் பிராந்தியத்தின் LILLE வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் கடமையாற்றிய DR. JEAN JACGUES கொரானா தாக்கத்தினால் இன்று உயிரிழந்தார்.
கொரோனா வைரஸின் ஆரம்ப தாக்குதல் நோயாளிகள் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகலாவிய ரீதியில் 335,403 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,611 பேர் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில் மாத்திரம் கொரோனா தொற்றினால் 59,138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5476 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடததக்கது.